கள்ளக்கூட்டணி அம்பலம்! எடப்பாடி பழனிசாமி மீது அமைச்சர் நாசர் கடும் குற்றச்சாட்டு!!
இஸ்லாமிய மக்கள் முதுகில் குத்தியுள்ளார் எடப்பாடி பழனிசாமி என்று சிறுபான்மைத் துறை அமைச்சர் சா.மு. நாசர் குற்றம் சாட்டியுள்ளார்.
இஸ்லாமியர்களை அவதூறாகப் பேசிய அலகாபாத் உயர்நீதிமன்ற நீதிபதியை தகுதி நீக்கம் செய்யக் கோரும் தீர்மானத்தை ஆதரித்து கையெழுத்திட அதிமுக மறுத்துள்ளது. இஸ்லாமிய மக்களுக்கு மீண்டும் துரோகத்தை செய்துள்ளது அதிமுக. பாஜகவுடன் கள்ளக்கூட்டணியை எடப்பாடி பழனிசாமி தொடர்வது அம்பலமாகியுள்ளது என்று சா.மு. நாசர் கூறியுள்ளார். அதிமுகவின் நான்கு மாநிலங்களவை உறுப்பினர்கள் இருந்தும் ஒருவர் கூட இஸ்லாமிய மக்களுக்கு ஆதரவாக அந்த தீர்மானத்தில் ஆதரித்து கையெழுத்திட வில்லை என்றும் குற்றம் சாட்டியுள்ளார் நாசர்.
அடிமை அதிமுகவையும் அதன் தற்போதைய தளகர்த்த எடப்பாடி பழனிசாமியின் துரோகத்தையும் இஸ்லாமிய மக்கள் என்றுமே மன்னிக்க மாட்டார்கள் என்றும் அமைச்சர் நாசர் குறிப்பிட்டுள்ளார். மேலும் மதப்பிரிவினைவாதிகளுடன் என்றும் கைகோர்க்கமாட்டோம் என்று நெஞ்சுரத்தோடுகளமாடி வருபவர் மாண்புமிகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் என்றும் அவர் கூறியுள்ளார்.