படிக்கட்டில் பயணம் செய்த கல்லூரி மாணவர்கள் 4 பேர் பலி.. லாரி மோதி உயிரிழந்த சோகம்!

 
Melmaruvathur

மேல்மருவத்தூர் அருகே தனியார் பேருந்தின் படிக்கட்டில் பயணித்த 4 மாணவர்கள் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் பகுதியில் ஸ்ரீ மாலோலன் கலை மற்றும் அறிவியல் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இந்த கல்லூரியில் ராமாபுரம், மோகல்வாடி ஆகிய கிராமங்களில் இருந்து கல்லூரி மாணவர்கள் படித்து வருகின்றனர். இன்றும் வழக்கம்போல் மாணவர்கள் கல்லூரிக்கு செல்ல தனியார் பேருந்தின் படிக்கட்டில் நின்றவாறு பயணித்துள்ளனர். 

Accident

அப்போது தனியார் பேருந்தை முந்தி செல்ல முயன்ற கண்டெய்னர் லாரி பேருந்து மீது உரசியதில் படிக்கட்டில் பயணித்த 4 மாணவர்கள் கீழே விழுந்ததில் 3 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் படுகாயமடைந்த மாணவர் ஒருவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே உயிரிழந்தார்.

இதுகுறித்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், உயிரிழந்த மாணவர்களின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், உயிரிழந்த மாணவர்கள் மோனிஷ், கமலேஷ், தனுஷ் மற்றும் ரஞ்சித் என்பது தெரியவந்துள்ளது.

Police

மேலும் 5 மாணவர்கள் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர். அதில் சில மாணவர்களின் உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு விசாரணை நடத்தி வருகின்றனர்.

From around the web