சி.பி.ஐ யிடம் சிக்கிய முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி!!

முன்னாள் அதிமுக அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மிது சி.பி.ஐ வழக்கு பதிவு செய்துள்ளது. எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராக இருந்த ஆட்சிக்காலத்தில் பால்வளத்துறை அமைச்சராக இருந்தவர் ராஜேந்திர பாலாஜி. அப்போது அதிரடியாக பேட்டி கொடுத்து வந்தார். ஒரு கட்டத்தில் மோடியின் தீவிர ஆதரவாளராக மாறிப் போனவர் மோடி எங்கள் டாடி என்றெல்லாம் பேசி பரப்பரப்பை ஏற்படுத்தினார்.
பால்வளத்துறை அமைச்சராக இருந்த போது ஆவின் நிறுவனத்தில் வேலை வாங்கித் தருவதாகச் சொல்லி லஞ்சம் பெற்றுக் கொண்டதாக அளிக்கப்பட்ட புகாரின் பேரில் ராஜேந்திர பாலாஜி மீது சி.பி.ஐ வழக்கு பதிவு செய்துள்ளது. ராஜேந்திர பாலாஜியுடன் மேலும் சிலர் மீதும் சி.பி.ஐ வழக்கு பதிவு செய்துள்ளது
அதிமுகவுடன் கூட்டணிக்காக பாஜக வற்புறுத்தி வருவதாக கூறப்படும் நிலையில் எடப்பாடி பழனிசாமியின் ஆதரவாளரான சி.பி.ஐ மீது வழக்கு பதிவு செய்துள்ளது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.