சமூகத் தளத்தில் வைரலாகும் தவெக வில் சேர்ந்த முன்னாள் ஐ.ஆர்.எஸ் அதிகாரி அருண்ராஜ்!!

 
Arunraj TVK Arunraj TVK

நடிகர் விஜய் யின் தவெக வில், அவர் வீட்டை சோதனையிட்ட, அவரை நெய்வேலி படப்பிடிப்பிலிருந்து வரிஏய்ப்பு விசாரணைக்காக உடன் அழைத்து வந்த முன்னாள் ஐ.ஆர்.எஸ். அதிகாரி அருண்ராஜ் இணைந்துள்ள செய்தி, சமூகத்தளத்தில் வைரலாகி வருகிறது.

விஜய் வீட்டை சோதனை செய்தவரே அவர் கட்சியில் சேர்ந்தது எப்படி. இது பாஜகவின் திட்டம் தான் என்று நெய்வேலி நிகழ்வு போதே என்னுடைய அச்சத்தை தெரிவித்தேன். விஜய் யை கட்சி தொடங்க வைத்து இஸ்லாமியர்கள், சிறுபான்மையினர் வாக்குகளை திமுகவிடமிருந்து பிரிப்பதே திட்டம் என்று ஊடகவியலாளர் செந்தில்வேல் கூறியுள்ளார்.

மற்றொரு ஊடகவியலாளர் மில்ட்டன், ”யார் இந்த அருண்ராஜ்..? அவரு Personal life குறித்தோ, Family குறித்தோ, போன தேர்தல்ல அவர் சொந்தகாரர் கிட்ட போட்டியிட வாய்ப்பு கேட்டாருனோ, அதுக்காக யாருகிட்டலாம் பேசுனாருங்குறது குறித்தோ, அவருக்கும் விஜய்க்குமான முதல் சந்திப்பு குறித்தோ நான் எதுவும் பேச வரல… எ

ந்த போஸ்டரும் ஒட்டாமல் கட்சியில் சேரும் போதே தவெக “மாநில கொள்கை பரப்பு பொது செயலாளராக” பதவி ஏற்று இருக்கும் Ex IRS திரு.அருண்ராஜ் அவர்களின் மாநில நலனுக்கு எதிரான சமூக நீதிக்கு எதிரான அப்பட்டமான சங்கி சிந்தனை முத்துகளை அம்பலப்படுத்த கடமைப்பட்டுள்ளேன்.

// How about having a presidential form of govt at the state level while retaining parliamentary form at the centre // // experts can become ministers without facing the polls // இந்த மாதிரியான தற்குறித்தனமான முத்துக்களை அருண் ராஜ் அவர்கள் அருண் ஜீ எனும் பெயரில் Blog open பண்ணி எழுதி வைத்து இருக்கிறார்…

இதோ லிங்க்: http://arunjispeaks.blogspot.com/2011/03/innovative-solution-for-better-india.html… 100 நாள் வேலை திட்டம் குறித்து அடிப்படை அறிவு கூட இல்லாத இந்த நபர் சங்கித்தனமாக எழுதியுள்ள செம Content உள்ளே இருக்கிறது. படித்து பங்கம் செய்வோமா…?” என்று எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

கட்சியில் இணைந்த உடனேயே கொள்கைப் பரப்புச் செயலாளராக அறிவிக்கப்பட்டுள்ள அருண்ராஜ் குறித்து பாஜக, ஆர்.எஸ்.எஸ். சிந்தனையாளார் என்ற கருத்து எழுந்துள்ளது.

From around the web