தஞ்சாவூரில் வெளிநாட்டவர் பொங்கல் கொண்டாட்டம்!
Jan 13, 2025, 19:58 IST

ஒவ்வொரு பொங்கல் திருநாள் போதும் வெளிநாட்டிலிருந்து வரும் சுற்றுலாப் பயணிகள் பொங்கல் கொண்டாட்டங்களில் பங்கேற்று மகிழ்ந்து வருவது வாடிக்கையாகும். இந்த ஆண்டும் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் சுற்றுலாப் பயணிகள் அந்தந்த ஊர்களில் நடக்கும் பொங்கல் விழாக்களில் பங்கேற்று கொண்டாடி வருகின்றனர்.
தஞ்சாவூர் அருகே நாச்சிக்கோட்டை கிராமத்தில் கொண்டாடப்பட்ட பொங்கல் விழாவில் பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, நெதர்லாந்து உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகள் பங்கேற்று மகிழ்ச்சியுடன் கொண்டாடினார்கள்.
சுற்றுலாப் பயணிகளுக்கு மாலை அணிவித்து, மாட்டு வண்டியில் அழைத்து வந்தனர். பொங்கல் வைத்து, கும்மி, கரகாட்டம் ஆடி உற்சாகமாக கொண்டாடி மகிழ்ந்தனர். தமிழ்நாட்டு பாரம்பரிய பொங்கல் திருநாள் பற்றி அவர்களுக்கு எடுத்துரைக்கப்பட்டது.