அடுத்த 3 நாட்களுக்கு வழக்கத்தைவிட 3 டிகிரி செல்சியஸ் வெப்பம் அதிகரிக்கும்.. அலெர்ட்டா இருங்க மக்களே!

 
Heat wave

தமிழ்நாட்டில் அடுத்த 3 நாட்களுக்கு இயல்பை விட வெப்பம் அதிகரிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மழைக்காலம், குளிர் காலம் முடிவடைந்து கோடை காலம் ஆரம்பித்துள்ள நிலையில் கோடையின் ஆரம்பமே உக்கிரமாக இருக்கிறது. மார்ச் 1-ம் தேதி முதல் படிப்படியாக வெப்பநிலை அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் தமிழ்நாட்டில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட இரண்டு முதல் மூன்று டிகிரி செல்சியஸ் அதிகரிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Heat wave

இன்று (மார்ச் 9) முதல் மார்ச் 15-ம் தேதி வரை தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

09.03.2024 முதல் 11.03.2024 வரை: தமிழகத்தில் ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கக்கூடும். அதிக வெப்பநிலை மற்றும் அதிக ஈரப்பதம் இருக்கும் பொழுது அசௌகரியம் ஏற்படலாம் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

heat-wave

அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 34-35 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 25-26 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

From around the web