அண்ணாமலையின் சவுக்கடி பரிகாரத்திற்காகவா? பத்திரிக்கையாளர் தகவல்!!
சென்னை அண்ணாப் பல்கலைக்கழக மாணவியின் வன்கொடுமைக்கு தமிழ்நாடு அரசு சரியான நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறி, திமுக அரசை மாற்றும் வரையிலும் காலில் செருப்பு போடமாட்டேன். எனக்கு நானே 6 சவுக்கடி கொடுத்துக் கொள்வேன் என்று கூறியிருந்தார் பாஜக தலைவர் அண்ணாமலை.
சொன்னது போலவே இன்று காலை கோவையில் பச்சை வேட்டி உடுத்தி, வெறும் காலுடன் மேல் சட்டை இல்லாமல் தனக்குத் தானே சவுக்கடி கொடுத்துக் கொண்டார். இது குறித்து சமூக ஊடகங்களில் பல்வேறு கருத்துகளைப் பகிர்ந்து வருகிறார்கள்.
இந்நிலையில் மூத்த பத்திரிக்கையாளர் தாமோதரன் பிரகாஷ், ”அண்ணாமலை சாட்டை அடித்து கொள்வதும்,ஒருமண்டலம்செருப்பில்லாமல் நடப்பதும் அவரது மனைவி அகிலாவும் அவரது அப்பாவும் நடத்திய யாகத்தில் பிராமண புரோகிதர்கள் சொன்னது தான்.இதை செய்தால் அண்ணாமலை பைல்ஸ்,IT raid எல்லாம் நீர்த்து போக தான் இந்த சாட்டையடி மற்றும் வெறுங்கால் பயணம்.” என்று எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
மேலும், அண்ணாமலை பயன்படுத்தியது சினிமாவில் பயன்படுத்தபடும் சவுக்கு என்றும் அவருக்காக தென்னை நாறினால் தயாரிக்கப்பட்ட சவுக்கை அண்ணாமலை பயன்படுத்தவில்லை என்றும் சமூகத்தளங்களில் பேசப்பட்டு வருகிறது. தமிழ்நாட்டு அரசியல் வரலாற்றிலேயே தன்னைத் தானே சவுக்கால் அடித்துக் கொண்ட முதல் அரசியல் தலைவர் அண்ணாமலை என்று இடம் பிடித்து விட்டார்.
முன்னதாக, தன்னுடைய குடும்பத்திலிருந்து யாராவது பாமகவில் சேர்ந்தால் என்னை சவுக்கால் அடியுங்கள் என்று பாமக தலைவர் ராமதாஸ் கூறியிருந்தார். அவருடைய மகன் கட்சியின் தலைவர் ஆகிவிட்டார். மருமகள் கட்சியின் வேட்பாளரும் ஆகிவிட்டார் என்பதும் குறிப்பிடத் தக்கது.