அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் ரூ. 1,000 பொங்கல் பரிசு தொகுப்பு.. முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!

 
Pongal

அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் ரூ.1,000 ரொக்க பணத்துடன் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

தமிழர்களின் முக்கிய பண்டிகையான பொங்கல் பண்டிகை ஆண்டுதோறும் ஜனவரி மாதத்தில் விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. முதலில் இலவச வேட்டி, சேலை மட்டும் வழங்கப்பட்டு வந்த நிலையில், அதன்பிறகு பொங்கல் பரிசுத் தொகுப்பு, ரொக்கப் பணம் என படிப்படியாக லிஸ்ட் பெரிதாகிக் கொண்டே வந்துள்ளது.

Pongal

இந்த நிலையில், ரேஷன் அட்டைதாரர்களுக்கு பச்சரிசி, சர்க்கரை, முழுக்கரும்பு போன்ற பொருட்கள் அடங்கிய தொகுப்புடன் ரூ. 1,000 ரொக்கப்பரிசு வழங்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். அதன்படி 2 கோடியே 19 லட்சத்து 57 ஆயிரத்து 402 ரேஷன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசுத்தொகுப்பு வழங்கப்பட உள்ளது.

மத்திய, மாநில அரசு ஊழியர்கள், வருமான வரி செலுத்துவோர், பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரிவோர், சர்க்கரை அட்டைதாரர்கள், பொருளில்லா அட்டைதாரர்கள் தவிர்த்து, ஏனைய குடும்ப அட்டைதாரர்கள் அனைவருக்கும் 1,000 ரூபாய்  ரொக்கமாக வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இதையடுத்து அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் பொங்கல் பரிசாக ரூ.1,000 வழங்க வேண்டும் என பலரும் வலியுறுத்தி வந்தனர்.  

pongal

இந்த நிலையில், பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று நிபந்தனையின்றி அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் பொங்கல் பரிசாக ரூ.1000 வழங்கப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். அத்துடன் 1 கிலோ பச்சரிசி, 1 கிலோ சர்க்கரை மற்றும் ஒரு முழு கரும்பு ஆகியவை பொங்கல் பரிசுத் தொகுப்பாக வழங்கப்படும் என்றும் அறிவித்தார். பலருக்கு பரிசுத் தொகைக்கான டோக்கன் மறுக்கப்பட்ட நிலையில், அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.

From around the web