தமிழ்நாட்டை மிரட்டும் ‘ஃப்ளூ’ காயச்சல்.. மருத்துவர் சொன்ன அதிர்ச்சி தகவல்

 
Flu

தமிழ்நாடு முழுவதும் ப்ளூ காய்ச்சல் பாதிப்பு அதிகரித்து வருவதால் பொதுமக்கள் பீதியடைந்து உள்ளனர்.

தமிழ்நாட்டில் 37 அரசு மருத்துவக் கல்லூரிகள் , 50 மருத்துவ கல்லூரியுடன் இணைந்த மருத்துவமனைகள், 1 அரசு பன்னோக்கு உயர்சிறப்பு மருத்துவமனை, 1 அரசு பல் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, 29 மாவட்டத் தலைமை மருத்துவமனைகள், 273 வட்டம் மற்றும் வட்டம் சாரா மருத்துவமனைகள், 1,806 ஆரம்ப சுகாதார நிலையங்கள், 8,713 துணை சுகாதார நிலையங்கள், 460 நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்கள், 15 நகர்ப்புற சமுதாய மையங்கள் உள்ளன.

மாறுபட்ட சீதோசன நிலை காரணமாக தமிழ்நாட்டில் ஃப்ளு காய்ச்சல் பாதிப்பு அதிகரித்துள்ளது. தொடரும் பனிப்பொழிவால் பலருக்கு காய்ச்சல் கண்டறியப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. குறிப்பாக கடந்த சில நாட்களாக அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் காய்ச்சல் உடல் சோர்வு, தலைவலி உள்ளிட்ட காரணங்களுக்காக சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர். காய்ச்சல் இருந்தால் உடனடியாக மருத்துவரை அணுகுமாறு அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளது.

Fever

அறிகுறிகள் என்ன?

  • ஃப்ளூ வைரஸ் காய்ச்சல் குழந்தைகளைத் தான் அதிகம் பாதிக்கும்.
  • ஜலதோஷம், மிக அதிக காய்ச்சல், விடாமல் ஏற்படும் இருமல் ஆகியவை இதன் அறிகுறியாகும்.
  • இந்த காய்ச்சல் சுவாச மண்டலத்தை அதிகம் பாதிக்கும்.
  • உடல் வலி, தலைவலி, சோர்வு, தொண்டை வறட்சி, வாந்தி , வயிற்று வலி போன்றவைகளும் இருக்கும்.

சிகிச்சை

  • ஃப்ளூ வைரஸ் காய்ச்சல் முதல் 4 நாட்களில் குணமாகிவிடும்
  • சிலருக்கு மட்டும் இருமலுடன் ஒரு வாரம் வரை நீடிக்க வாய்ப்பு உள்ளது.
  • இதற்கு ஏற்கனவே தடுப்பூசி உள்ளது.

பாதுகாப்பு வழிமுறைகள்

  • குழந்தைகளுக்கு இதற்கான தடுப்பூசி கட்டயாம் செலுத்த வேண்டும்.
  • வெளியில் சென்று வந்த பிறகு கைகளை கழுவிட்டு அல்லது குளித்து விட்டுதான் குழந்தைகளை தூக்க வேண்டும்.
  • வீட்டில் யாருக்காவது காய்ச்சல் இருந்தால் அவர் உட்பட அனைவரும் முக்கவசம் அணிய வேண்டும்.
  • காய்ச்சல் உள்ளவர்கள் கட்டாயம் தனிமையில் இருக்க வேண்டும்.
  • தொடக்க நிலையிலியே மருத்துவமனைக்கு செல்ல வேண்டும்
  • காய்ச்சல் பாதிப்புக்கு சுயமாக மருந்து எடுத்துக் கொள்ளக் கூடாது.

From around the web