அவனியாபுரத்தில் பரிசு பெற்ற முதல் காளை மலையாண்டி!! 19 காளைகளை அடக்கிய வீரர் கார்த்திக்!!

 
Avaniyapuram

மதுரை மாவட்டம் அவனியாபுரத்தில் நடைபெற்ற முதல் ஜல்லிக்கட்டுப் போட்டி நிறைவுற்றுள்ளது. இந்தப் போட்டியில் முதல் பரிசு பெற்ற காளையின் பெயர் மலையாண்டி ஆகும்.

சசிகலாவின் பெயரில் இந்தக் காளை களம் இறக்கப்பட்டிருந்தது. அவனியாபுரம் போட்டியில் திருப்பரங்குன்றத்தைச்  சேர்ந்த கார்த்திக் 19 காளைகளைப் பிடித்து முதலிடத்தையும்,குன்னத்தூர் அரவிந்த் குமார் 15 காளைகளை அடக்கி இரண்டாவது இடத்தையும்,  சிவகங்கை முரளிதரன் 13 காளைகளைப் பிடித்து மூன்றாவது இடத்தையும் பிடித்துள்ளனர்.

Avaniyapuram

முதல் பரிசு பெற்ற கார்த்திக் க்கு எட்டரை லட்சம் ரூபாய் மதிப்புள்ள நிஸான் கார் பரிசளிக்கப்பட்டது. இரண்டாம் இடத்தைப் பெற்ற அரவிந்த் திவாகருக்கு இரு சக்கர வாகனம் பரிசளிக்கப்பட்டது

From around the web