ஆம்னி பேருந்தில் தீ! பயணிகளுக்கு என்னாச்சு?
Feb 20, 2025, 07:02 IST

சென்னையிலிருந்து பாபநாசம் நோக்கிச் சென்று கொண்டிருந்த தனியார் ஆம்னி பஸ்ஸில் திடீரென்று தீப்பிடித்து எரியத் தொடங்கியது.
நள்ளிரவில் பெரம்பலூர் அருகே இந்த தீ விபத்து நடந்துள்ளது. இருட்டில் பேருந்து தீப்பிடித்து எரியும் காட்சியின் வீடியோ வைரலாகி வருகிறது.
பேருந்தில் பயணித்த 23 பயணிகள் உயிர் தப்பியுள்ளதாகக் கூறப்படுகிறது. தீ விபத்திற்கான காரணம் இன்னும் தெரியவில்லை.