அரசு மருத்துவமனையில் தீ விபத்து! நோயாளிகளுக்கு பாதிப்பா?
Jan 2, 2025, 07:56 IST
இராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் நேற்று நள்ளிரவில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. 5 மாடி கட்டிடத்தில் இயங்கி வரும் இந்த மருத்துவமனையின் 2வது தளத்தில் ஏற்பட்ட மின் கசிவால் இந்த தீ விபத்து ஏற்பட்டுள்ளது. உடனடியாக மின்சாரம் துண்டிக்கப்பட்டு நோயாளிகள் அனைவரையும் பாதுகாப்பாக முதல் தளத்திற்கு ஊழியர்கள் அழைத்து வரப்பட்டனர்.
380க்கும் மேற்பட்ட நோயாளிகள் அவசர அவசரமாக வெளியேற்றப்பட்டனர். மருத்துவமனை வளாகம் இருளில் மூழ்கியதாலும், புகை காரணமாகவும் நோயாளிகள் பெரிதும் சிரமம் அடைந்தனர். ஆனால் தீ யில் சிக்காமல் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர்.
விரைந்து வந்த தீயணைப்புத்துறையினர் தீயை கட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர்.