ஆசிரியர் காலி இடங்களை உடனே நிரப்புக! ஓ.பன்னீர்செல்வம் அறிக்கை!!

 
தமிழகத்தில் நாளையே ஜல்லிக்கட்டு…  முதல்வர் ஓ பன்னீர்செல்வம் அறிவிப்பு

தமிழ்நாடு அரசு தொடக்கப்பள்ளிகளில் 2200 தலைமை ஆசிரியர்களுக்கான பணியிடங்கள் காலியாக உள்ளது, அதை உடனடியாக நிரப்ப வேண்டும் என்று ஓ.பன்னீர் செல்வம் கோரிக்கை விடுத்துள்ளார்.

”தமிழ்நாட்டில் இடைநிலை ஆசிரியர்களுக்கான பதவி உயர்வு, கலந்தாய்வு இரண்டு ஆண்டுகளாக நீதிமன்ற வழக்கு காரணமாக நடைபெறவில்லை. இதுதொடர்பான வழக்கு உச்சநீதிமன்றாத்தில் நடைபெற்று வருவதால், அரசு தொடக்கப்பள்ளிகளில் 2,200 தலைமை ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன. இதுதவிர, ஆயிரக்கணக்கான ஆசிரியர் மற்றும் தலைமை ஆசிரியர் பணியிடங்களும் காலியாக உள்ளன்

தி.மு.க. அரசிற்கு உண்மையிலேயே மாணவர்களின் கல்வி மீது அக்கறை இருந்திருந்தால், உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள இந்த வழக்கை விரைவுபடுத்தி காலிப்பணிடங்களை நிரப்பி இருக்க வேண்டும். இதைச் செய்யாததால் இந்த வழக்கு 20 முறைக்கு மேல் தள்ளிவைக்கப்பட்டுள்ளது.

கல்வியின் இன்றியமையாத் தன்மையைக் கருத்தில் கொண்டு, சுப்ரீம் கோர்ட்டில் நிலுவையில் உள்ள வழக்கை தமிழக அரசு உடனடியாக முடிவுக்கு கொண்டு வந்து தொடக்கப்பள்ளிகளில் காலியாக உள்ள தலைமை ஆசிரியர் பணியிடங்களை உடனடியாக நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தமிழ்நாடு அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளார்.

 

From around the web