பிரபல யூடியூபர் இர்ஃபானின் சொகுசு கார் மோதி பெண் பலி.. போலீசார் விசாரணை!!

 
Irfan

செங்கல்பட்டு அருகே பிரபல யூடியூபர் இர்ஃபானுக்கு சொந்தமான பென்ஸ் கார் மோதியதில் பெண் ஒருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகரில் உள்ள நகராட்சி அலுவலகத்திற்கு எதிராக நேற்று இரவு சொகுசு கார் ஒன்று மோதி பத்மாவதி என்ற பெண் சம்பவ இடத்தில பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மறைமலைநகர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Accident

பின்னர் உயிரிழந்த பத்மாவதி உடலை கைப்பற்றி போலீசார் பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விவகாரம் தொடர்பாக தாம்பரம் காவல் ஆணையர் கட்டுப்பாட்டில் இருக்கின்ற காரணத்தினால் அதன் போக்குவரத்து புலனாய்வு அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில், அந்த சொகுசு காரை ஓட்டி வந்தவர் அசாருதின் என்பது தெரிய வந்திருந்தது. அவரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. குறிப்பாக இந்த விபத்து தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டபோது சொகுசு கார் என்பது பிரபல யூடியூபர் இர்ஃபான் என்பவருக்கு சொந்தமான பென்ஸ் கார் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.

Police

உணவு பிரியர்கள் மத்தியில் பிரபலமானவர் யூடியூபர் இர்ஃபான். இவர் இர்பான்ஸ் வியூ என்கிற யூடியூப் சேனலை நடத்தி வருகிறார். ஆரம்பத்தில் சினிமா விமர்சனங்களை செய்து வந்த அவர், அதற்கு வரவேற்பு கிடைக்காததால், பல்வேறு ஊர்களுக்கு சென்று அங்குள்ள உணவுகளை சுவைத்து, அதனை வீடியோவாக வெளியிட தொடங்கினார். திருமணம் நடந்த ஒரு சில நாட்களில் யூடியூபர் இர்பானின் கார் மோதிப் பெண் ஒருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

From around the web