பிரபல நகைக்கடை உரிமையாளர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை.. கிருஷ்ணகிரியில் அதிர்ச்சி சம்பவம்!

 
Krishnagiri

கிருஷ்ணகிரியில் பிரபல நகைக்கடை உரிமையாளர் எம்.பி.சுரேஷ் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துக்கொண்டு சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கிருஷ்ணகிரி காந்திநகர் பகுதியை சேர்ந்தவர் எம்.பி.சுரேஷ். இவர் நகரில் வெங்கடேஸ்வரா ஜுவல்லரி எனும் பிரபல நகைக்கடை மற்றும் வணிக வளாகம் நடத்தி வந்தார். இதனிடையே ரியல் எஸ்டேட் தொழிலும் ஈடுபட்டு இருந்தார். மேலும் அனைத்து வணிகர் சங்க பேரமைப்பின் நகர தலைவராக உள்ள எம்.பி. சுரேஷ் நேற்று இரவு வீட்டிற்கு சென்று மனைவி மகளிடம் நன்றாக உரையாடிவிட்டு பின் தனது அறைக்கு உறங்க சென்றுள்ளார்.

Gun suicide

இந்த நிலையில் இன்று காலை திடீரென அவரது அறையில் இருந்து துப்பாக்கி வெடிக்கும் சத்தம் கேட்டுள்ளது. இதனையடுத்து உறவினர்கள் உடனடியாக அவர் அறைக்கு சென்று பார்த்த போது தன்னை தானே துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. இதனை அடுத்து அவரது குடும்பத்தார் உடனடியாக கிருஷ்ணகிரி நகர போலீசாருக்கு தகவல் அளித்தனர்.

தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பர்கூர் சரக டி.எஸ்.பி மனோகரன் மற்றும் போலீசார் தற்கொலை செய்துகொண்ட தொழிலதிபர் எம்.பி.சுரேஷ் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் லைசென்சுடன் வைத்துள்ள அவரது துப்பாகியை பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

Krishnagiri Town PS

போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் குடும்ப பிரச்சினை மற்றும் கடன் பிரச்சினை காரணமாக தற்கொலை செய்துகொண்டு இருக்கலாம் எனவும் ரியல் எஸ்டேட் தொழிலில் முதலீடு செய்த பணம் திரும்ப வரவில்லை என்ற காரணமும் இருக்கலாம் என தகவல் வெளியாகி உள்ளது. தொழிலதிபரும், அனைத்து வணிகர் சங்க பேரமைப்பின் நகர தலைவருமான எம்.பி.சுரேஷ் தற்கொலை செய்துகொண்டதை அடுத்து வணிகர் சங்க பேரமைப்பு சார்பில் கிருஷ்ணகிரி நகரில் கடை அடைப்பு செய்து இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

From around the web