போளிவாக்கம் நித்தியானந்தம் சுவாமி காலமானார்.. ஆசிரமத்தில் நல்லடக்கம் செய்த சீடர்கள்!

 
polivakkam-nityanandam-swami

செத்து போ என்று மனிதர்களின் கெட்ட எண்ணங்களை சாக கொடுங்கள் என்று கூறி ஆசீர்வதித்து வந்த போளிவாக்கம் சாமியார் உடல் நலக்குறைவால் காலமானார். 

திருவள்ளூர் மாவட்டம் போளிவாக்கம் கிராமத்தில் நித்தியானந்தம் சுவாமி நேற்று அதிகாலை காலமானார். தகவல் அறிந்த ஸ்ரீநித்தியானந்த சுவாமிகளின் பிரம்ம சூத்திர குழுவினர்  கோவில் வாளாகத்தில் திரண்டனர். 

மேலும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆத்மார்த்த சிடர்கள் நேரில் வந்து அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தினர். இதையடுத்து மாலை 5 மணி அளவில் நித்தியானந்த சாமியாரை அமர்ந்த நிலையில் சமாதியில் வைத்து  நல்லடக்கம் செய்தனர்.

polivakkam-nityanandam-swami

ரயில்வே துறையில் பணியாற்றிய நித்தியானந்தம் என்பவர் பின்னர் குடும்ப வாழ்க்கையிலிருந்து வெளியேறி திருவள்ளூர் அருகே தனக்கென்று ஒரு தனி மடத்தை நிறுவினார். அங்கு அவரை நாடி வந்த மதுரை, தர்மபுரி, கிருஷ்ணகிரி உள்ளிட்ட தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்தவர்களுக்கு ஞான உபதேசம் அளித்து வந்தார்.

இந்த நிலையில், நித்தியானந்தம் சுவாமிக்கு ஏற்பட்ட திடீர் உடல் நலக்குறைவால் கோடம்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது சடலத்தை போளிவாக்கம் கிராமத்தில் உள்ள கோவில் வளாகத்திற்கு கொண்டு வந்த அவரது சீடர்கள், இறுதி சடங்கை செய்து, அமர்ந்த நிலையில் நல்லடக்கம் செய்தனர்.

polivakkam-nityanandam-swami

இதனைக் காண தமிழ்நாட்டின் பல்வேறு பகுதியில் இருந்து வந்த அவரது சீடர்கள், “மனிதர்களின் இதயத்தில் உள்ள கெட்ட நினைவுகளை செத்துப்போ” என்று அவர் கூறியதாகவும், அவரது ஆசீர்வாதத்திற்கு பின்னர் தங்களது வாழ்வில் பல மாற்றங்கள் ஏற்பட்டதாக பலமுறை நித்தியானந்த சுவாமியின் கருத்துக்கள் இவரது போதனைகள் உண்மையுள்ள கருத்துகள் மன நிம்மதியை தந்தததுடன், இந்த ஆத்ம திருப்தி தங்களுக்கு ஏற்பட்டது என தங்களது அனுபவங்களை பகிர்ந்தனர்.

From around the web