கோடை விடுமுறை நீடிப்பு.. ஜூன் 7ம் தேதி பள்ளிகள் திறப்பு.. அமைச்சர் அன்பில் மகேஷ் அதிரடி அறிவிப்பு..!

 
school

கோடை வெயிலின் தாக்கம் காரணமாக ஜூன் 7ம் தேதி அனைத்து வகுப்புகளுக்கும் பள்ளிகள் திறக்கப்படும் என அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவித்துள்ளார்.

தமிழ்நாட்டில் பள்ளி மாணவர்களுக்கு ஏப்ரல் மாதம் இறுதியில் ஆண்டு இறுதித் தேர்வுகள் முடிந்தன. இதனையடுத்து, தற்போது கோடை விடுமுறையில் மாணவர்கள் உள்ளனர். ஜூன் 1ம் தேதி 6 முதல் 12ம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறக்கப்படும் என அமைச்சர் அன்பில் மகேஷ் ஏற்கனவே அறிவித்திருந்தார்.

ஆனால், எந்த வருடமும் இல்லாத அளவுக்கு தற்போது கோடை வெயில் கொளுத்தி வருகிறது. இதனால் வீட்டை விட்டு வெளியே வர முடியாத சூழல் நிலவுகிறது. ஆகவே, பள்ளிகள் திறப்பை ஒத்திவைக்க வேண்டும் என பல்வேறு தரப்பில் இருந்தும் கோரிக்கைகள் வைக்கப்பட்டு வருகின்றன. 

School-students

இந்த நிலையில் நேற்று மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுடன் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பள்ளிகள் திறப்பு குறித்தும் ஆலோசனை மேற்கொண்டதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.

இந்த நிலையில் அமைச்சர் அன்பில் மகேஷ் வெளியிட்ட அறிக்கையில், “முதல்வர் அவர்களின் ஆணைக்கிணங்க கோடை வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் மாணவர்களின் உடல்நலத்தைக் கருத்தில் கொண்டு ஜூன் மாதம் 7ம் தேதி முதல் பள்ளிகள் மீண்டும் திறக்கப்படும்” என்று அறிவித்துள்ளார்.

Anbil-Mahesh

முன்னதாக செய்தியாளர்களை சந்தித்த அவர், கோடை விடுமுறை என்பது மாணவர்களை ஆசுவாசப்படுத்த கூடிய காலம் என்றும், கோடை விடுமுறை காலத்திலும் மாணவர்களுக்கான பாடங்களை நடத்துவதை தனியார் பள்ளிகள் தவிர்க்க வேண்டும். இதை வேண்டுகோளாக முன்வைக்கின்றேன். ஆங்கில பயிற்சி, நீச்சல், விளையாட்டு போன்ற திறமைகளுக்கான காலமாக கோடை விடுமுறையை பயன்படுத்துங்கள் என்றும் கூறினார்.

From around the web