தனியார் கல்குவாரியில் வெடி விபத்து.. 4 பேர் உடல் சிதறி பலி.. அதிர்ச்சி வீடியோ

 
Virudhunagar

விருதுநகர் அருகே தனியார் கல்குவாரியில் ஏற்பட்ட வெடி விபத்தில் சிக்கி 4 பேர் உடல் சிதறி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி அருகே ஆவியூர் - கீழஉப்பிலிக் குண்டு சாலையில் இயங்கி வந்த தனியார் கல்குவாரியில் வெடி விபத்து ஏற்பட்டது. பாறைகளை உடைக்க பயன்படுத்தப்படும் வெடி மருந்துகளை, குவாரி அருகே உள்ள அறையில் இறக்கியபோது எதிர்பாராத விதமாக வெடிமருந்துகள் வெடித்து சிதறின.

Virudhunagar

இந்த விபத்தில் சிக்கி 4 தொழிலாளர்கள் சம்பவ இடத்திலேயே உடல் சிதறி உயிரிழந்தனர். 2 வாகனங்கள் முற்றிலும் சேதமடைந்தன. சம்பவ இடத்தில் வெடிமருந்துகள் இருப்பதால் தீயணைப்புத் துறையினர், போலீசார் செல்ல முடியால் உள்ளனர். வெடி விபத்தால் அப்பகுதியை சுற்றி 20 கிலோ மீட்டர் தூரம் வரை அதிர்வுகள் ஏற்பட்டு வீடுகள் சேதமடைந்துள்ளதாக கூறப்படுகிறது.

மேலும் கல்குவாரியில் தொழிலாளர்கள் பலர் சிக்கியிருப்பதால் உயிரிழப்பு அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது. கல் குவாரியை மூட வலியுறுத்தி கடம்பன்குளம் கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் கல்குவாரியில் ஏற்பட்ட வெடிவிபத்து தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகி பதபதப்பை ஏற்படுத்தியுள்ளது.


விபத்து தொடர்பாக ஆவியூர் காவல் நிலையத்தில் குவாரி பங்குதாரர் சேது ராமன் என்பவர் சரணடைந்துள்ளார். இந்நிலையில், குவாரி உரிமையாளர்கள் ராஜ்குமார் மற்றும் சேது ராமன் ஆகிய இருவர் மீது 4 பிரிவுகளில் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

From around the web