எல்லோருக்கும் எல்லாம்... தாயுமானவர் திட்டத்தை அறிமுகப்படுத்திய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!!
வயதான மூத்த குடிமக்களுக்கு வீடு தேடி ரேஷன் பொருட்களை வழங்கும் திட்டமான தாயுமானவர் திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிமுகப்படுத்தி வைத்தார். சென்னையில் மூதாட்டி ஒருவரின் வீட்டிற்கு நேரடியாகச் சென்று ரேஷன் பொருட்களை வழங்கிய முதலமைச்சர் இந்தத் திட்டம் குறித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
”பெண்கள், மாற்றுத்திறனாளிகள், திருநங்கையர், வாய்ப்பு மறுக்கப்பட்டோர் என அரசின் ஆதரவுக் கரங்கள் தேவைப்படும் அனைவரையும் அரவணைப்பதுதான் திராவிட மாடல்! எவரையும் விட்டுவிடமாட்டோம்! அந்த வகையில், மாநிலத்தின் ஏற்றத்துக்காகவும் தங்களது குடும்பங்களின் வளர்ச்சிக்காகவும் உழைத்த உள்ளங்களான வயது முதிர்ந்தோரின் வீட்டுக்கே சென்று நேரடியாக ரேசன் பொருட்களை வழங்கிடும் தாயுமானவர் திட்டம் இன்று முதல்!. எல்லாருக்கும் எல்லாம்” என்று வீடியோவுடன் பதிவிட்டுள்ளார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
தங்களுக்கு வாக்களிப்பார்களா இல்லையா என்று எந்த எதிர்ப்பார்ப்பும் இன்றி அனைத்து மக்களுக்குமான அரசாக செயல்படுகிறது என்பதற்கு இந்தத் திட்டமும் சாட்சியாகும். வயதானவர்கள் தேர்தல் நேரத்தில் வாக்குச்சாவடிக்கு வர இயலுமா? சிரத்தை எடுத்து வந்து வாக்களிப்பார்களா? என சற்றும் யோசிக்காமல் முதலமைச்சர் இந்தத் திட்டத்தை செயல்படுத்துகிறார் என்று பாராட்டுகள் குவிந்து வருகிறது/
பெண்கள், மாற்றுத்திறனாளிகள், திருநங்கையர், வாய்ப்பு மறுக்கப்பட்டோர் என அரசின் ஆதரவுக் கரங்கள் தேவைப்படும் அனைவரையும் அரவணைப்பதுதான் #DravidianModel! எவரையும் விட்டுவிடமாட்டோம்!
— M.K.Stalin (@mkstalin) August 12, 2025
அந்த வகையில், மாநிலத்தின் ஏற்றத்துக்காகவும் தங்களது குடும்பங்களின் வளர்ச்சிக்காகவும் உழைத்த உள்ளங்களான… pic.twitter.com/zDf2jxZ26c
