விழித்துக் கொண்டோரெல்லாம் பிழைத்துக் கொண்டார்!

 
Adhav

குறி விசிக வுக்கு இல்லை ; திமுக கூட்டணிக்கு என்கிறார் திருமா.

ஆனால், எதிர்கட்சிகளை விட விசிக கட்சியின் துணை பொதுச் செயலாளர் ஆதவ் தான் காழ்ப்புணர்ச்சியுடன் விமர்சனம் செய்து திமுக கூட்டணிக்கு வேட்டு வைக்கும் வேலையை தொடர்ந்து செய்கிறார்.

கோடாலி காம்பை கையிலேயே வைத்துக் கொண்டு, கூட்டணியை உடைக்கப் பார்க்கிறார்கள்... உடைக்கப் பார்க்கிறார்கள் என்று மட்டுமே சொல்வது என்ன நியாயம்.?

வெற்றிக் கூட்டணியில் தொடர விசிக முடிவு செய்ய...விசிக வுக்கு டிமான்ட் அதிகமாக இருப்பதாக காட்ட ஆதவ் "விமர்சன" தீ வைக்க... இதுவும் நல்லாதானே இருக்குன்னு ஆரம்பத்தில் விசிக அமைதி காக்க...இப்போது அடிமடியிலேயே தீ பற்றி விட்டதே என்ன செய்வதென விளங்காமல் விழித்துக் கொண்டு இருக்கிறது விசிக.

விழித்துக் கொண்டோரெல்லாம் பிழைத்துக் கொண்டார்.!

- வி.எம்.கே.பாபு

From around the web