தட்டுல போட்டாலும் கோவிலுக்குத் தான்! மதுரையில் புதிய விதி!!

பொதுவாக கோவில்களுக்குச் செல்லும் பக்தர்கள் அர்ச்சகரின் தட்டில் போடும் பணத்தை அர்ச்சகர்களே பிரித்துக் கொள்வது தான் வழக்கம். பக்தர்கள் உண்டியலில் போடாமல் அர்ச்சகர்களின் தட்டில் போட வேண்டும் என்றும் ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீத்தாரமன் தமிழ்நாட்டு கோவில் வருகையின் போது கூறியிருந்தார்.
இன்னும் சிலர் தட்டில் போடும் பணம் கோவிலுக்குச் செல்வதில்லை. எனவே உண்டியலில் போட வேண்டும். அது தான் கோவில் நிர்வாகப் பணிகளுக்குச் செல்லும் என்றும் கூறுவது உண்டு/
இந்நிலையில் மதுரை நேதாஜி சாலலை யில் அமைந்துள்ள தண்டாயுதபாணி கோவிலில் பக்தர்கள் தட்டில் போடும் பணத்தை, கோவில் உண்டியலில் போட வேண்டும் என்று அர்ச்சகர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. உண்டியலில் செலுத்தாத அர்ச்சகர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது. கோவில் மணியம் மற்றும் காவலர்கள் இதைக் கண்காணிக்க வேண்உம் என்றும் கோவில் செயல் அலுவலரின் சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது.