ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்... 66,575 வாக்குகள் வித்தியாசத்தில் ஈவிகேஎஸ் இளங்கோவன் அபார வெற்றி!!

 
EVKS

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் 66,575 வாக்குகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றார்.

ஈரோடு கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ.வாக இருந்த திருமகன் ஈவெரா கடந்த ஜனவரி மாதம் 4-ம் தேதி காலமானார். இதனால்  ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வாக்குப்பதிவு கடந்த மாதம் 27-ம் தேதி நடைபெற்றது. இந்த இடைத்தேர்தலில் காங்கிரஸ் சார்பில் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனும், அதிமுக சார்பில் தென்னரசுவும் களத்தில் உள்ளன. இதுதவிர தேமுதிக, நாம் தமிழர் கட்சிகளும் வேட்பாளர்களை களமிறக்கியுள்ளனர். 

Erode

இந்த நிலையில் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி இன்று காலை 8 மணிக்கு தொடங்கியது. 15-வது சுற்றுகளின் வாக்கு எண்ணிக்கை முடிவில் 1,10,556 வாக்குகளை பெற்று ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் வெற்றி பெற்றுள்ளார். அதிமுக வேட்பாளர் தென்னரசுவை விட சுமார் 66,575 வாக்குகள் வித்தியாசத்தில் காங்கிரஸ் வேட்பாளர் இளங்கோவன் வெற்றி பெற்றுள்ளார்.

EVKS

இந்த நிலையில் ஈவிகேஎஸ் இளங்கோவன் செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது, “வெற்றி எதிர்பார்த்த ஒன்று தான். ஆனால் இவ்வளவு பெரிய வெற்றியை நான் எதிர்பார்க்கவில்லை. இவ்வளவு பெரிய வெற்றியை ஈரோடு மக்கள் தந்திருக்கிறார்கள். என்னை வெற்றி பெற வைத்த ஈரோடு மக்களின் குறைகளை தீர்க்க பாடுபடுவேன். இந்த வெற்றி முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு கிடைத்த வெற்றி. இந்த வெற்றி மு.க.ஸ்டாலின் ஆட்சிக்கு கிடைத்த வெற்றி” என்றார்.

From around the web