ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!!

 
ஓபிஎஸ் மீது மோடிக்கு ஏன் தனி காதல்? – ஈவிகேஎஸ் இளங்கோவன் கேள்வி!

ஈரோடு கிழக்குத் தொகுதியில் 2021ம் ஆண்டு திருமகன் ஈவெரா போட்டியிட்டு வெற்றி பெற்றார். உடல்நலக்குறைவால் அவர் காலமானபிறகு நடைபெற்ற இடைத் தேர்தலில் அவருடைய தந்தை ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் போட்டியிட்டு வெற்றி பெற்றார். ஈ.வி.கே.எஸ். இளங்கோவனும் உடல்நலக்குறைவால் கடந்த மாதம் காலமானார். தற்போது மீண்டும் காலியாகி உள்ள ஈரோடு கிழக்கு தொகுதிக்கு இடைத் தேர்தலை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

பிப்ரவரி 5ம் தேதி ஈரோடு கிழக்கு தொகுதியில் தேர்தல் நடைபெறும். வாக்கு எண்ணிக்கை பிப்ரவரி 8ம் தேதி நடைபெற்று முடிவுகள் அறிவிக்கப்படும் என்று  இந்திய தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் அறிவித்துள்ளார்.
ஜனவரி 10ம் தேதி முதல் வேட்புமனு தாக்கல் செய்யலாம். வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி நாள் ஜனவரி 17 ஆகும். வேட்புமனு மீது ஜனவரி 18ம் பரிசீலனை செய்யப்பட்டும். வேட்புமனுவை வாபஸ் பெற கடைசி நாள் ஜ்னவரி 20 ஆகும். அன்று இறுதி வேட்பாள்ர் பட்டியலும் தெரிந்து விடும். பொங்கல் மற்றும் விடுமுறை நாட்களில் வேட்புமனு தாக்கல் செய்ய முடியாது.

மிகவும் குறைவான காலக்கெடுவுடன் இந்த தேர்தல் அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதிமுக மற்றும் எதிர்க்கட்சிகளின் தரப்பில் ஒருங்கிணைந்த வேட்பாளர் நிறுத்தப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. திமுக கூட்டணி சார்பில் காங்கிரஸ் கட்சியே போட்டியிடும். ஈ.வி.கே. இளங்கோவனின் மற்றொரு மகன் சஞ்சய் போட்டியிடக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

From around the web