பொறியியல், பி.டெக். படிப்புகளில் சேர இன்று முதல் விண்ணப்பிக்கலாம்.. ஆன்லைனில் விண்ணப்பிப்பது எப்படி?

 
BE

தமிழ்நாட்டில் பொறியியல் படிப்பில் சேருவதற்கான ஆன்லைன் விண்ணப்ப செயல்முறை இன்று முதல் தொடங்குகிறது.

தமிழ்நாட்டில் ப்ளஸ் 2 பொதுத்தேர்வு கடந்த ஏப்ரல் 3-ம் தேதி நிறைவடைந்த நிலையில், விடைத்தாள் திருத்தும் பணி கடந்த வார இறுதியில் நிறைவடைந்தன. இதையடுத்து, மதிப்பெண்களை தொகுக்கும் பணிகள் நடந்து வருகின்றன. மேலும் ப்ளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகள் 8-ம் தேதி வெளியாகும் என தேர்வுத்துறை அறிவித்துள்ளது.

இதனையடுத்து பி.இ / பி.டெக் / பி.ஆர்க் பட்டப்படிப்பிற்கு அரசு / அரசு உதவி பெறும் பொறியியல் கல்லூரிகள் / அண்ணாமலை பல்கலைக்கழகம் மற்றும் சுயநிதி பொறியியல் கல்லூரிகளில் சேருவதற்கான விண்ணப்ப செயல்முறை இன்று முதல் தொடங்கப்பட்டுள்ளது.

மாணவர்கள் http://tneaonline.org என்ற இணையதளத்தில் விண்ணப்பங்களை பதிவு செய்யலாம். மேலும் இணையதள வாயிலாக விண்ணப்பிக்க இயலாத மாணவர்களுக்கு ஏதுவாக, தமிழ்நாடு பொறியியல் சேர்க்கை சேவை மையம் TNEA Facilitation centre (TFCs) அனைத்து மாவட்டங்களிலும் அமைக்கப்பட்டுள்ளது. அதன் விவரங்களை அதிகாரப்பூர்வ இணையதளம் வாயிலாக மாணவர்கள் தெரிந்துகொள்ளலாம்.

College

இன்று முதல் (மே 3) தொடங்கி ஜூன் 4-ம் தேதி வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இதற்கு பதிவுக் கட்டணமாக OC / BC / BCM / MBC & DNC பிரிவு விண்ணப்பதார்கள் ரூ.500 மற்றும் SC / SCA / ST பிரிவு விண்ணப்பதார்கள் ரு.250 செலுத்த வேண்டும். ஆன்லைனில் செலுத்த இயலாத மாணவர்கள் The Secretary TNEA payable at chennai என்ற பெயரில் வரைவோலையை பதிவுக் கட்டணமாக தமிழ்நாடு பொறியியல் சேர்க்கை சேவை மையம் வாயிலாக மட்டுமே சமர்ப்பிக்கலாம்.

மாணவர்கள் கலந்தாய்வு விவரங்கள், வழிகாட்டி மற்றும் கால அட்டவணையை அதிகாரப்பூர்வ இணையதளம் வாயிலாக மட்டுமே அறிந்துகொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஆன்லைனில் விண்ணப்பிக்கும் போது அசல் சான்றிதழ்களை இணையதளம் வாயிலாக சரிபார்க்கும்பொருட்டு, தங்களுக்கு விருப்பமான தமிழ்நாடு பொறியியல் சேர்க்கை சேவை மையத்தினை தேர்வு செய்து கொள்ளவேண்டும்.

Admission

சான்றிதழ்கள் இணையதளம் வாயிலாக சரிபார்க்கும் போது ஏதேனும் குறைபாடுகள் கண்டறியப்பட்டால், மாணவர்களின் பதிவு செய்த அலைபேசி மற்றும் மின்னஞ்சல் முகவரிக்கு தெரிவிக்கப்படும். அதன் பெயரில் குறிப்பிட்ட தேதி மற்றும் நேரத்தில் TFC மையத்திற்கு நேரடியாக வந்து சரிசெய்து கொள்ள வழிவகை செய்யப்பட்டுள்ளது.

மேலும் பி.இ, பி.டெக் (Lateral Entry and Part Time) பட்டப் படிப்புகள் சேர்க்கைக்கான அறிவிப்பு பின்னர் அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மாணவர்கள் சந்தேகங்களுக்கு 044 – 2235 1014 / 1015 மற்றும் 1800 – 425 – 0110 என்ற தொலைப்பேசி எண்களுக்கும் என்ற மின்னஞ்சல் முகவரிக்கும் தொடர்புக் கொள்ளலாம்.

From around the web