பிரபல தொழிலதிபர் மணல் ராமச்சந்தின் வீட்டில் அமலாக்கத்துறை அதிரடி சோதனை.. புதுக்கோட்டையில் பரபரப்பு!

 
Pudukottai

புதுக்கோட்டையில் தொழிலதிபர் மணல் ராமச்சந்திரன் என்பவருக்கு தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறை சோதனை நடத்தி வருகிறது.

தமிழ்நாட்டின் பிரபல மணல் ஒப்பந்தக்காரர் முத்துப்பட்டினம் ராமச்சந்திரன். பல அரசியல் கட்சிகளுக்கும் மிகவும் நெருக்கமானவர். தேர்தல் வந்துவிட்டால் பல அரசியல் கட்சிகளுக்கும் நிதி வழங்கி தனது தொழிலை தக்க வைத்துக் கொள்வார். மணல் ஒப்பந்தம் இல்லை என்பதால் தற்போது கிராவல் விற்பனை தொடங்கி உள்ளார். இவருக்கு மட்டும் மண், மணல், கிராவல் எடுக்க எப்போதுமே அனுமதி உண்டு. அனுமதியே இல்லை என்றாலும் இவரது பேரில் உள்ள வாகனங்களை எந்த இடத்திலும் பிடிக்க மாட்டார்கள். அத்தனைத்துறை அதிகாரிகளும் அவரது விரல் அசைவுக்கு கட்டுப்படுவார்கள்.

ED

இந்த நிலையில், புதுக்கோட்டையில் மணல் குவாரி நடத்தி வரும் தொழிலதிபர் ராமச்சந்திரனின் வீடு மற்றும் அவருக்கு சொந்தமான 40-க்கும் மேற்பட்ட இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் துப்பாக்கி ஏந்திய சிஆர்பிஎப் வீரர்கள் உதவியோடு சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

அதன்படி, கரூர், திருச்சி, தஞ்சாவூர், வேலூர், விழுப்புரம், திருவண்ணாமலை, புதுக்கோட்டை, கடலூர் மாவட்டங்கள் மற்றும் விளாத்திகுளத்தில் சோதனை நடத்தப்பட்டு வரும் நிலையில் சட்டவிரோத சுரங்க முறைகேட்டில் ஈடுபட்டதாக வந்த புகாரில் சோதனை என தகவல் வெளியாகியுள்ளது.

Ramachandran

தமிழ்நாடு முழுவதும் செந்தில் பாலாஜி தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வரும் இந்த சூழலில் ராமச்சந்திரன் வீட்டிலும் சோதனையானது நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

From around the web