அக்டோபர் மாத கணக்கீட்டின் படி மின்கட்டணம் செலுத்தலாம்.. மின்கட்டணம் புதிய அப்டேட்!

 
TNEB

சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் அக்டோபர் மாத கணக்கீட்டின் படி மின்கட்டணம் செலுத்தலாம் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.

மிக்ஜாம் புயலின் தாக்கத்தால் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய 4 மாவட்டங்களில் மழை கொட்டி தீர்த்தது. 36 மணி நேரம் இடைவிடாது கொட்டிய கனமழையால் 4 மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன. இதன்காரணமாக தமிழ்நாடு அரசால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் அறிவிக்கப்பட்டு உள்ளது.

TNEB

குறிப்பாக புயல் பாதித்த சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் மின் கட்டணம் செலுத்த, டிசம்பர் 18-ம் தேதி வரை அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. வெள்ள பாதிப்பை கருத்தில் கொண்டு 4 மாவட்ட மக்களும் அபராதமின்றி மின்கட்டணம் செலுத்தலாம் என்றும் தெரிவிக்கப்பட்டு இருந்தது.

TNEB

இந்நிலையில் மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய 4 மாவாட்டங்களில் அக்டோபர் மாத மின்கணக்கீட்டின் படி செலுத்தலாம் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. மழை பாதிப்பு காரணமாக 4 மாவட்டங்களில் மின் கணக்கீடு செய்ய சிரமம் உள்ளதாக மின்வாரியம் சார்பில் விளக்கமளிக்கப்பட்டு உள்ளது.

From around the web