தூத்துக்குடியில் மின்சார கார் தொழிற்சாலை.. அடிக்கல் நாட்டிய முதல்வர் மு.க.ஸ்டாலின்..!

 
Thoothukudi

தூத்துக்குடியில் தனியார் மின்சார வாகனங்கள் உற்பத்தி தொழிற்சாலைக்கு தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்.

சென்னையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் கடந்த மாதம் உலக முதலீட்டாளா் மாநாட்டு நடைபெற்றது. இதில் ரூ.16 ஆயிரம் கோடி மதிப்பில் வியட்னாம் நாட்டைச் சோ்ந்த வின் ஃபாஸ்ட் என்ற தனியாா் மின்சார காா் தொழிற்சாலை தொடங்க புரிந்துணா்வு ஒப்பந்தம் கையொழுத்திடப்பட்டது. இந்த நிலையில் இன்று தூத்துக்குடியில் வின் ஃபாஸ்ட் காா் உற்பத்தி நிறுவனத்தின் அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது.

Thoothukudi

தூத்துக்குடி சில்லாநத்தம் பகுதியில் அமைந்து இருக்கும் சிப்காட் வளாகத்தில் இன்று காலை முதல்வர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார். வின் ஃபாஸ்ட் கார் தொழிற்சாலைக்காக தூத்துக்குடி சில்லாநத்தம் சிப்காட் வளாகத்தில் 408 ஏக்கா் பரப்பளவில் நிலம் தோ்வு செய்யப்பட்டு இருக்கிறது. இந்த அடிக்கல் நாட்டு விழாவில் வியட்னாம் நாட்டு முறைப்படி பூஜைகள் நடத்தப்பட்டன.

அத்துடன் தூத்துக்குடியில் நடைபெறும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் பங்கேற்பதற்காக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தூத்துக்குடி செல்கிறார். தூத்துக்குடி அருகே புதுக்கோட்டை சூசை பாண்டியாபுரத்தில் இந்த நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் கலந்து கொண்டார். அப்போது நெல்லை, தூத்துக்குடியில் பெய்த கனமழையால் வீடுகளை இழந்தவர்கள், சேதமடைந்தவர்கள், மீன்பிடி படகுகள் சேதமடைந்தவர்கள் என வெள்ளத் தொகுப்புகளை பார்வையிட்டு, மீனவர்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கினார்.

MKS

முதல்வர் மு.க.ஸ்டாலின் வருகையை முன்னிட்டு தென் மாவட்டங்களான குமரி, நெல்லை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் இருந்து சுமாா் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் தூத்துக்குடி வரவழைக்கப்பட்டு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு உள்ள மாவட்ட காவல்துறை தெரிவித்து உள்ளது.

From around the web