மேட்டுப்பாளையத்தில் சுவர் இடிந்து விழுந்து முதியவர் பலி.. தொடர் மழையால் விபரீதம்!

 
Coimbatore

மேட்டுப்பாளையத்தில் மழைக்கு கடையின் சுவர் இடிந்து தொழிலாளி பலியான சம்பவம்  அந்த பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

கோயம்புத்தூர் மாவட்டம் மேட்டுப்பாளையம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த 10 நாட்களுக்கு மேலாக இரவு நேரங்களில் மழை பெய்து வருகிறது. இதனிடையே நேற்று இரவும் பலத்த மழை பெய்தது. இரவில் தொடங்கிய மழை விடிய, விடிய கொட்டி தீர்த்தது. இந்த மழைக்கு பல சாலைகளிலும் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. தாழ்வான பகுதிகளிலும் தண்ணீர் தேங்கியது.

மேட்டுப்பாளையம் காந்திபுரம் 3-வது வீதியை சேர்ந்தவர் பழனிசாமி (63). கூலித்தொழிலாளியான இவர் அந்த பகுதிகளில் உள்ள கடையோரங்களில் இரவில் படுத்து தூங்குவது வழக்கம். நேற்று இரவும் வழக்கம் போல் அங்கு புதுப்பித்து கட்டப்பட்டு வரும் ஒரு கடையின் அருகே படுத்து தூங்கினார்.

dead-body

நேற்று இரவு தொடர்ந்து மழை பெய்து கொண்டே இருந்ததால், புதுப்பிக்கப்பட்டு வரும் கடையின் சுவர் மற்றும் மேற்கூரை சரிந்து விழுந்தது. இதில் கடையின் கீழே படுத்திருந்த பழனிசாமி சிக்கி கொண்டார். இதில் பலத்த காயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுகுறித்து மேட்டுப்பாளையம் போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், இடிபாடுகளை அகற்றி, இறந்த பழனிசாமியின் உடலை மீட்டனர். பின்னர், பழனிசாமியின் உடலை பிரேத பரிசோதனைக்காக மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

Mettupalayam PS

மேலும் இந்த சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மழைக்கு கடையின் சுவர் இடிந்து தொழிலாளி பலியான சம்பவம்  அந்த பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

From around the web