சனாதான சங்கிலிகளை நொறுக்கும் ஒரே ஆயுதம் கல்வி!! கமல் ஹாசன் மீது வழக்கு பாயுமா?

 
kamal kamal

நடிகர் சூர்யா நடத்தி வரும் அகரம் அறக்கட்டளையின் விழாவில் பேசிய கமல்ஹாசன் எம்.பி, சனாதான சங்கிலிகளை நொறுக்கித் தள்ளக்கூடிய ஒரே ஆயுதம் கல்வி தான் என்று அதிரடியாகப் பேசியுள்ளார்.

நீட் வேண்டாம் என்று ஏன் சொல்கிறோம். கல்வியால் மட்டுமே அந்த சட்டத்தை நீக்கமுடியும். இதில் அரசியல் இல்லை.

முதலமைச்சரை சந்தித்து விட்டு தான் இங்கு வந்து இருக்கிறேன். தொண்டு நிறுவனங்களுக்கு அனுமதி கொடுங்கள் என்று கேட்டுவிட்டு தான் இங்கு வந்திருக்கிறேன். செய்து கொண்டு இருக்கிறோம் என்று முதலமைச்சர் சொன்னார்.  நல்ல விஷயங்களை எதிரியிடம் இருந்து கூட எடுத்துக் கொள்ளலாம். இது நம்ம பிள்ளை. நம்ம பிள்ளையிடமிருந்து எடுத்துக் கொள்வது நமக்குப் பெருமை.

அரசு புதிய  திட்டங்களைக் கொண்டு வருகிறது. அதில் எனக்கும் உங்கள் அனைவருக்கும் பங்கு இருக்கிறது. என்று பேசினார் கமல் ஹாசன.

முன்னர் ஒரு விழாவில் சனாதானம் என்பது டெங்கு கொசு போல் ஒழிக்கப்பட வேண்டும் என்று துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியதைத் தொடர்ந்து அவர் மீது நாடு முழுவதும் வழக்கு தொடரப்பட்டது.

தற்போது எம்.பி.யாக பதவியேற்றுள்ள கமல்ஹாசன் அகரம் அறக்கட்டளை விழாவில் சனாதான சங்கிலிகளை நொறுக்கும் ஆயுதம் கல்வி தான் என்று பேசியுள்ளார். இதற்காக கமல்ஹாசன் மீது வழக்கு தொடரப்படுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

From around the web