எடப்பாடி திமுக தோல்வியைத் தழுவும்.. டிடிவி தினகரன் பொளேர்!!
Oct 13, 2025, 07:58 IST
திமுகவுக்கும் தவெகவுக்கும் தான் போட்டி என்று விஜய் அறிவித்த பிறகு தவெக உடன் கூட்டணி என்று எடப்பாடி பழனிசாமி தரந்தாழ்ந்து பேசி வருகிறார் என்று அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் கூறியுள்ளார்.
ஆடு நனையுதேன்னு ஓநாய் அழுவது போல், கரூர் சம்பவத்திற்குப் பிறகு தவெக தொண்டர்கள் கலங்கிப் போயிருக்கும் நிலையை பயன்படுத்திக் கொண்டு, அவர்களுக்கு ஆதரவாகப் பேசுவது போல் பேசி, கூட்டணிக்கு அழைக்கிறார்.
விஜய் தலைமையிலான கூட்டணிக்காக இடிஎம்கே (எடப்பாடி திமுக) சேரப்போவதாகத் தான் எல்லோரும் பேசிக் கொண்டிருக்கிறார்கள்.எடப்பாடி பழனிசாமி தோல்வியை சந்திப்பார் என்றும் டிடிவி தினகரன் கூறியுள்ளார்.
