கொட நாடு கொலை கொள்ளை வழக்கில் எடப்பாடிக்கு பயம்! டிடிவி தினகரன் சொல்லும் சஸ்பென்ஸ்!!

கொடநாடு கொலை கொள்ளை வழக்கில் எடப்பாடி பழனிசாமி பயந்து போய் உள்ளார் என்று அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கூறியுள்ளார். மேலும் விரைவில் நல்ல செய்தி வரும் என்று சஸ்பென்ஸ் வைத்துள்ளார்.
தஞ்சாவூரில் செய்தியாளர்களை சந்தித்தி டிடிவி தினகரன், ”அதிமுகவின் உண்மையான தொண்டர்கள் ஒன்றிணைய எடப்பாடி தடையாக இருக்கிறார். ஏனென்றால் கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் தன்னை கைது செய்து விடுவார்களோ என அவர் பயந்துள்ளார். தன்னிடம் இரட்டை இலை சின்னம், கட்சி, பணபலம் உள்ளது என்ற அதிகார போக்கில் அவர் செயல்பட்டு வருகிறார்.
எடப்பாடி தலைமையில் போட்டியிட்ட 10 தேர்தல்களில் அதிமுக படுதோல்வியை சந்தித்தது. வருகின்ற 2026 தேர்தலிலும் இவ்வாறு அவர் செய்தால் அதன் பின்னர் கட்சி மேலும் பலவீனமாகிவிடும். தற்போது செங்கோட்டையன் மனநிலையில் தான் அதிமுகவின் பெரும்பாலான தொண்டர்கள் உள்ளனர். விரைவில் நல்ல செய்தி வரும் என எதிர்பார்க்கிறோம்” என்று கூறியுள்ளார்.