2926 தேர்தலோடு எடப்பாடி பழனிசாமியின் அரசியல் முடியும்! ஆர்.எஸ்.பாரதி ஆவேசம்!!

EPS Amitshah EPS Amitshah

2026 தேர்தலுடன் எடப்பாடி பழனிசாமியின் அரசியல் வாழ்க்கை  முடிவுக்கு வரும் என்று திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி கூறியுள்ளார். திமுக-காங்கிரஸ் கூட்டணி ஆட்சியில் தமிழ்நாட்டிற்கு கொண்டு வரப்பட்ட திட்டங்களையும் பட்டியலிட்டு எடப்பாடி பழனிசாமிக்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.

”திமுகதான் காங்கிரஸ் மிரட்டலுக்குப் பணிந்தது. அதிமுக – பாஜக கூட்டணி மகிழ்ச்சியோடு அமைந்திருக்கிறது எனப் பேசியிருக்கிறார் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி.

2004 முதல் 2014 வரை காங்கிரஸ் கூட்டணியில் அங்கம் வகித்தபோது தமிழ்நாட்டுக்கு திமுக கொண்டு வந்த திட்டங்கள் ஏராளம். பாஜகவுக்கு சேவை செய்யவே நேரம் இல்லாத பழனிசாமிக்கு, திமுக கொண்டு வந்த திட்டங்கள் எல்லாம் எப்படி நினைவுக்கு வரும்?

பழனிசாமி பாஜகவுடன் கூட்டணியில் இருந்து என்ன செய்தார்? எத்தனை திட்டங்களைக் கொண்டு வந்தார்? என பட்டியல் போட முடியுமா? மாறாகத் தமிழ்நாட்டுக்கு துரோகங்களைத்தான் பழனிசாமி செய்தார்.” என்று ஆர்.எஸ்.பாரதி கேள்வி எழுப்பியுள்ளார்

From around the web