3 மணி நேரம் காத்திருந்து சின்ன டேடியை வரவேற்ற எடப்பாடி பழனிசாமியின் விசுவாசிகள்!!

விமான நிலையத்தில் 3 மணி நேரத்திற்கும் மேலாக காத்திருந்து மதுரை வந்த ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை வரவேற்பதற்காக வரவேற்றனர் முன்னாள் அமைச்சர்கள் செல்லூர் ராஜு மற்றும் ஆர்.பி.உதயகுமார்.
அதிமுகவிலிருந்து ஓ.பி.எஸ். நீக்கப்பட்ட பிறகு தென் மாவட்டங்களில் செல்வாக்கு மிக்க அமைச்சர்களாக விளங்கிய செல்லூர் ராஜு, ஆர்.பி.உதயகுமார். ராஜேந்திர பாலாஜி ஆகியோர் எடப்பாடி பழனிசாமியின் தீவிர ஆதரவாளர்களாக திகழ்கிறார்கள். 2026 தேர்தலுக்காக அதிமுக - பாஜக கூட்டணி உறுதியான பிறகு மதுரைக்கு முதன் முதலாக வந்துள்ளார் அமித்ஷா.
அமித்ஷாவை வரவேற்க ஒன்றிய அமைச்சர் எல்.முருகன், தமிழ்நாடு பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், முன்னாள் தலைவர்கள் தமிழிசை சவுந்தரராஜன், அண்ணாமலை , முன்னாள் ஒன்றிய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், மூத்த தலைவர் எச்.ராஜா மற்றும் நிர்வாகிகள் திரளாக விமான நிலையத்திற்கு வந்திருந்தனர்
இரவு 7:30 மணிக்கு அமைச்சர் அமித்ஷா வருவதாக இருந்தது. பாஜக கூட்டம் நடைபெறும் ஒத்தகடை அரங்கப் பணிகள் முடிவடைந்து ஒன்றிய பாதுகாப்பு படை வசம் ஒப்படைப்பதில் தாமதம் ஏற்பட்டதால் டெல்லியிலிருந்து தாமதமாகப் புறப்பட்டார் அமித்ஷா. இரவு 10:30 மணிக்கு விமான நிலையம் வந்திருந்தார்.
அமைச்சர் அமித்ஷாவை வரவேற்க வந்திருந்த முன்னாள் அமைச்சர்கள் ஆர்.பி.உதயகுமார் மற்றும் செல்லூர் ராஜு மூன்று மணி நேரத்திற்கு மேலாக விமான நிலையத்தில் காத்திருந்தனர்.
மோடி எங்க டேடி என்று அதிரடியாகப் பேசியவர் முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி. மோடி டேடி ன்னா அமித்ஷா சின்ன டேடி தானே? ஆனால் ராஜேந்திர பாலாஜி அமித்ஷாவை வரவேற்க வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது