பாஜக வை கண்டித்து எடப்பாடி பழனிசாமி போராட்டம்?

பாஜக அரசையும் தமிழ்நாடு அரசையும் கண்டித்து அதிமுக தலைவர் எடப்பாடி பழனிசாமி போராட்டம் அறிவித்துள்ளார். மதுரை - தூத்துக்குடி இடையே அருப்புக்கோட்டை வழியாக புதிய ரயில் பாதை அமைப்பதற்கு தமிழ்நாடு அரசு ஒப்புதல் வழங்கவில்லை என்றும் அதனால் அந்தத் திட்டத்தை ரத்து செய்வதாகவும் ஒன்றிய ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் கூறியிருந்தார்.
ஆனால், இந்தத் திட்டத்திற்கு தமிழ் நாடு அரசு நிலம் கையகப்படுத்திக் கொண்டிருக்கிறது. ரயில்வே அமைச்சர் கூறுவது உண்மையல்ல என்று தமிழ்நாடு போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் மறுப்பு தெரிவித்து இருந்தார்.
இந்நிலையில் மதுரை - தூத்துக்குடி புதிய ரயில் பாதையை ரத்து செய்த ஒன்றிய பாஜக அரசையும், திட்டத்திற்கு நிதி வழங்காத மாநில திமுக அரசையும் கண்டித்து தமிழ்நாடு முழுவதும் போராட்டம் நடத்தப்படும் என்று அதிமுக தலைவரும், தமிழ்நாடு எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
அண்ணா பல்கலைக் கழக மாணவி விவகாரத்தில், யார் அந்த சார் போராட்டத்தை கையிலெடுத்த எடப்பாடி பழனிசாமி அடுத்த போராட்டத்தை கையிலெடுத்துள்ளார்.