திமுக ஆட்சிக்கு நாள் குறித்தார் எடப்பாடி பழனிசாமி!!

 
EPS

முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆர் பிறந்தநாள் விழா நிகழ்ச்சியில் பங்கேற்றுப் பேசிய முன்னாள் முதலமைச்சர், இப்போதைய எதிர்க்கட்சித் தலைவர் மற்றும் அதிமுகவின் பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி திமுக ஆட்சிக்கு இன்னும் 13 அமாவசை தான் இருக்கிறது என்று கூறியுள்ளார்.

4 ஆண்டு ஆட்சியில் என்னப்பா செஞ்சிருக்க? என்று கூறிவிட்டு கூட்டத்தைப் பார்த்து செஞ்சிருக்காரா என்று கேள்வி எழுப்பினார். பின்னர் அவரே தொடர்ந்து, செஞ்சிருக்கார். மகனை துணை முதலமைச்சராக ஆக்கியிருக்கார். அது தான் அவர் செய்த் சாதனை. தினசரி போட்டோ ஷூட் நடத்தி வெறும் விளம்பரம் செய்கிறார். தினம் ஒரு அறிவிப்பு. அதுக்கு ஒரு குழு. இது வரைக்கும் ஐம்பது குழுக்கள். ஸ்டாலின் மாடல் அரசாங்கம் குழு அரசாங்கம். குழு போட்டுட்டா அதோடு முடிஞ்சி போச்சு.

மக்களுக்கு என்னய்யா செஞ்சே? அதிமுக ஆட்சியில் கடுமையான கொரோனா காலம். மக்களின் உயிரை காப்பாற்ற நடவடிக்கை எடுத்து காப்பாற்றினோம். மக்களுக்கு துன்பமில்லாத ஆட்சி அதிமுக ஆட்சி. 11 மாதம் சத்துணவு கொடுத்தோம். கொரோனோ தொற்று ஏற்பட்டவர்களுக்கு மருத்துவமனையில் சிகிச்சையும் சத்தான உணவும் கொடுத்தோம்.. அப்படிப்பட்ட நல்ல ஆட்சி அதிமுக ஆட்சி.   இப்ப ரேசன் கடையில் பொருட்கள் இல்லை. திருநெல்வேலி அல்வா தான் கொடுக்கிறார்கள். இன்றைக்கு ஆட்சியே இல்லை. ஒரு பொம்மை முதலமைச்சர் ஆண்டு கொண்டிருக்கிறார் என்று எடப்பாடி பழனி சாமி பேசியுளார்.

From around the web