வேலுமணி வீட்டு திருமண விழாவில் எடப்பாடி பழனிசாமி! நீங்கியதா கருத்து வேறுபாடு?

 
Edpadi Velumani

முன்னாள் அதிமுக அமைச்சர் எஸ்.பி.வேலுமணியின் மகன் திருமணத்தின் போது அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி பங்கேற்கவில்லை. பாஜக தமிழ்நாடு தலைவர் அண்ணாமலை கலந்து கொண்டார். அவருக்கு முன்னாள் அதிமுக அமைச்சர்கள் எழுந்து நின்று மரியாதை செய்த நிகழ்வு அதிமுக வட்டாரத்தில் பரபரப்பாகப் பேசப்பட்டது..

எடப்பாடி பழனிசாமி திருமணத்திற்கு செல்ல தயாராக இருந்ததாகவும், அண்ணாமலை வந்ததால் தவிர்த்து விட்டதாகவும் கூறப்பட்டது. இந்நிலையில் திருமண வரவேற்பு விழாவில் எடப்பாடி பழனிசாமி பங்கேற்றுள்ளார். வேலுமணி மீது அதிருப்தியில் இருப்பதால் கோவை மாவட்டத்தில் வேலுமணிக்குப் போட்டியாக வேலுச்சாமிக்கு பதவி வழங்கியதாகவும் பேசப்பட்டது.

பாஜகவுடன் வேலுமணி நெருக்கமாக இருப்பது எடப்பாடி பழனிசாமிக்கு பிடிக்க வில்லை, பாஜக அல்லாத கூட்டணியை உருவாக்க அவர் முயல்வதாகவும் பேசப்பட்ட நிலையில் இன்று எஸ்.பி.வேலுமணி இல்ல திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளார் எடப்பாடி பழனிசாமி.