எடப்பாடி தான் எல்லாமுமே.. ஒரே போடு போட்ட நடிகை கவுதமி!!

பாஜகவிலிருந்து விலகி அதிமுகவில் சேர்ந்த நடிகை கவுதமி ஸ்ரீவில்லிப்புத்தூர் தொகுதியை குறி வைத்து அரசியல் நகர்வுகளை செய்து வருகிறார். கடந்த தேர்தலில் பாஜகவில் இதே தொகுதியை கேட்ட போது மறுத்துவிட்டனர். பாஜகவிலிருந்து விலகி அதிமுகவுக்கும் வந்து விட்டார். தற்போது அதிமுகவைச் சேர்ந்த மான்ராஜ் இந்தத் தொகுதியின் எம்.எல்.ஏ.வாக இருக்கிறார். இது தொடர்ச்சியாக அதிமுக வசம் இருக்கும் தொகுதியாகும்.
ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் நேற்று சுவாமி தரிசனம் செய்த பின்னர் அளித்த பேட்டியில், ‘‘தமிழகம் முழுவதும் உள்ள அதிமுகவினர், அதிமுக பரம்பரை வாக்காளர்களை நேரில் சென்று சந்திக்க உள்ளேன். யாருக்கு எந்த தொகுதி என முடிவு செய்ய காலம் உள்ளது. இதுகுறித்து எடப்பாடி பழனிசாமி சரியான நேரத்தில் சரியான முடிவு எடுப்பார்’’ என்று கூறியுள்ளார் கவுதமி.
தேர்தலுக்கான அனைத்து பணிகளும் எடப்பாடி பழனிசாமி தலைமையில்தான் நடைபெறும் என்பதை உள்துறை அமைச்சர் அமித்ஷா உறுதிப்படுத்தி இருக்கிறார். அதிமுக கூட்டணியில் எந்த கட்சி இணைய வேண்டும் என்பது குறித்து எடப்பாடி சரியாக முடிவெடுப்பார். எடப்பாடி மிக தெளிவாக இருக்கிறார் என்றும் கூறியுள்ளார் அதிமுக கொள்கை பரப்பு துணைச் செயலாளர் நடிகை கவுதமி.