குடிபழக்கத்தால் தகராறு.. திருமணமான ஒரு மாதத்தில் புதுமாப்பிள்ளை தூக்குபோட்டு தற்கொலை!

 
Tirupur

திருமணமான ஒரு மாதத்தில் புதுமாப்பிளை தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவில் கே.வி.பழனிசாமி நகரைச் சேர்ந்தவர் மோகன்குமார் (34). லாரி டிரைவர். இவருடைய தந்தை மனோகரன் ஏற்கனவே இறந்து விட்டார். மோகன் குமாருக்கு கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு திருமணம் நடைபெற்றது. மோகன் குமார் தனது மனைவி மற்றும் தாயார் ஈஸ்வரியுன் ஒரே வீட்டில் வசித்து வந்தார்.

Suicide

மோகன் குமாருக்கு குடிப்பழக்கம் இருந்து வந்துள்ளது. இதனால் கணவன் - மனைவிக்கு இடையே தொடர்ந்து சண்டை ஏற்பட்டு வந்துள்ளது. நேற்று முன்தினம் இரவு குடிபோதையில் வந்த மோகன் குமாரை தாயாரும், மனைவியும் திட்டி விட்டு உறவினர் வீட்டுக்கு சென்று விட்டனர்.

இதனால் மனமுடைந்து காணப்பட்ட மோகன்குமார் தனது வீட்டின் விட்டத்தில் சேலையால் தூக்கில் தொங்கினார். இதை பார்த்த அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் உடனடியாக அவரை மீட்டு தனியார் ஆம்புலன்ஸ் மூலம் காங்கேயம் அரசு மருத்துவமனைக்கு கொண்டுசென்றனர்.

Vellakoil PS

அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்த புகாரின் பேரில் வெள்ளகோவில் சிறப்பு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் செல்வராஜ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். திருமணமான ஒரு மாதத்தில் லாரி டிரைவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

From around the web