குடிபோதையில் சாலை நடுவே படுத்திருந்த இளைஞர்.. தலைமேல் ஏறிச்சென்ற லாரி.. பகீர் சம்பவம்

சேலம் அருகே போதை தலைக்கேறியதால் நடுரோட்டில் படுத்து இருந்த இளைஞர் மீது லாரி ஏறி இறங்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சேலம் மாவட்டம், எடப்பாடி நகராட்சி ஆலச்சம்பாளையம் பூசாரிவட்டம் பகுதியைச் சேர்ந்தவர் குமார். இவரது மகன் சங்கர் (30). இவர் மேட்டூர் அனல்மின்நிலையத்தில் ஒப்பந்த ஊழியராக வேலை பார்த்து வந்தார்.
இந்த நிலையில், நேற்று முன்தினம் இரவு எடப்பாடி - பூலாம்பட்டி பிரதான சாலையில் கள்ளுக்கடை பகுதியில் உள்ள டாஸ்மாக் கடைக்கு மது குடிக்க வந்துள்ளார். அங்கு அவர் மது குடித்த நிலையில், போதை தலைக்கேறியதால் கள்ளுக்கடை பகுதியில் உள்ள பிரதான சாலையின் நடுவில் படுத்திருந்தார்.
அப்போது அந்த வழியாக வந்த டேங்கர் லாரி ஒன்று சாலையில் படுத்து கிடந்த சங்கரின் தலையின் மீது ஏறி இறங்கியது. இதனால் தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே அவர் துடிதுடித்து உயிரிழந்தார்.
சாலையின் நடுவே படுத்திருந்த நபர் தலை மீது ஏறிய டேங்கர் லாரி.. அதிர்ச்சி வீடியோ!#Salem #accident pic.twitter.com/wysDYhONkI
— A1 (@Rukmang30340218) June 20, 2024
விபத்து தொடர்பாக அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.