அரசு மருத்துவமனையில் மதுபோதையில் ரகளை செய்த மருத்துவர்.. திருவள்ளூரில் பரபரப்பு

 
Tiruvallur

திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் மருத்துவர் ஒருவர் மதுபோதையில் இருந்த வீடியோ வைரலாகி வருகிறது.

திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் சுமார் 500-க்கும் மேற்பட்டோர் உள்நோயாளிகளாக சிசிக்சைபெற்று வருகிறார்கள். 150-க்கும் மேற்பட்ட மருத்துவர்கள் மற்றும் பயிற்சி மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர். மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து தினந்தோறும் ஏராளமானோர் வந்து சிகிச்சை பெற்று செல்கிறார்கள்.

Drinkes

இந்த நிலையில் நேற்று இரவு மருத்துவமனையில் உள்ள அவசர சிகிச்சை பிரிவில் மருத்துவர் ஒருவருக்கு பணி ஒதுக்கப்பட்டு இருந்தது. பணிக்கு வந்த அந்த மருத்துவர் அதிக மதுபோதையில் இருந்துள்ளார். மேலும் அவர் நோயாளிகளுடன் உடன் இருந்த உறவினர்களை ஒருமையில் பேசி திட்டி வெளியே அனுப்பி உள்ளார்.

மேலும் அவர் மதுபோதை மயக்கத்தில் மருத்துவமனை வெளியே உள்ள திண்ணையில் படுத்து தூங்கினார். இதனை கண்டு மருத்துவமனையில் ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக அவரை மருத்துவமனை உள்ளே செல்லுமாறு தெரிவித்தனர். ஆனால் போதை மயக்கத்தில் இருந்த அந்த மருத்துவர் மருத்துவமனைக்குள் செல்ல மறுத்து ரகளையில் ஈடுபட்டார்.

Tiruvallur GH

இதனால் என்ன செய்வது என்று தெரியாமல் திகைத்த ஊழியர்கள், போதை மருத்துவரை காவலாளிகள் தங்கும் அறையில் படுக்க வைத்தனர். இன்று காலை நீண்ட நேரத்திற்கு பின்னர் போதை தெளிந்ததும் அந்த ரு புறப்பட்டு சென்று உள்ளார். அவசர சிகிச்சை பிரிவில் பணியில் இருந்த டாக்டர் மதுபோதையில் தூங்கிய சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. சம்பந்தப்பட்ட டாக்டர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். மருத்துவர் நல்லதம்பி மீது நடவடிக்கை எடுக்கப்படும் என டீன் ரேவதி உறுதி அளித்துள்ளார்.w

From around the web