ஓட்டுனர் நடத்துனர் தேர்வு.. ஏப்ரல் 21 க்குள் விண்ணப்பிக்கலாம்!!
Mar 20, 2025, 08:17 IST

தமிழ்நாடு அரசுப் பேருந்து கழகங்களில் உள்ள ஓட்டுனர்கள் நடத்துனர்களுக்கான காலியிடங்களை நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. ஏப்ரல் 21ம் தேதிக்குள் இந்தப் பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம் என்று போக்குவரத்து துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு முழுவதும் உள்ள 8 போக்குவரத்துக் கழகங்களில் மொத்தம் 3274 ஓட்டுனர் நடத்துனர் பணியிடங்கள் காலியாக உள்ளது. சென்னை மாநகரப் பேருந்து கழகத்தில் 364 பணியிடங்களும் தொலை தூரம் செல்லும் அரசு விரைவுப் போக்குவரத்து கழகத்தில் 318 பணியிடங்களும் காலியாக உள்ளன.