திராவிட மாடல் ஆட்சி தமிழ்நாட்டின் பொற்காலம் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
சோழர்கள் ஆட்சியை பொற்காலம் என்று சொல்வது போல் மக்களாட்சி மலர்ந்த பிறகு திராவிட மாடல் ஆட்சிக்காலம் தான் தமிழ்நாட்டின் பொற்காலம் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
திமுக செயற்குழு கூட்டம் சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்றது. இதில் பங்கேற்றுப் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், எதிரிகள் எந்த வடிவில் வந்தாலும் அவர்களாஇ 75 ஆண்டுகளாக அடையாளம் கண்டு வீழ்த்தும் ஆற்றல் கொண்டது திமுக.
வெள்ளிவிழா, பொன்விழா, பவளவிழா கண்ட போதெல்லாம் ஆட்சியில் இருக்கும் திமுக, நூற்றாண்டு விழா காணும் போதும் ஆட்சியில் இருப்போம். மக்களாட்சியில் திராவிட மாடல் ஆட்சிக்காலம் தான் தமிழ்நாட்டின் பொற்காலம். தமிழ்நாட்டை வளர்த்தெடுத்தவர்கள் இந்த கருப்பு சிவப்புக்காரர்கள்
2026ல் 200 தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெற்று ஆட்சியை மீண்டும் பிடிப்போம். கட்சித் தொண்டர்களின் உழைப்புடன் இதை நாம் பெறுவோம். கட்சியின் அமைப்பு முறை தான் நம்முடைய பெரும் பலம். திமுகவின் உட்கட்டமைப்பு மிகப்பலமானது. கருப்பு சிவப்பு தொண்டர்களாகிய உங்கள் மீதுள்ள நம்பிக்கையில் தான் சொல்கிறேன்” என்று பேசியுள்ளார்.