கூட்டணிக்கு 3 மாதம் கால அவகாசம் கேட்ட டாக்டர் ராமதாஸ்!!

செய்தியாளர்களை சந்தித்த பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூட்டணி குறித்து 3 மாதத்தில் முடிவு எடுக்கப்படும் என்று கூறியுள்ளார்.
”விரைவில் நல்ல செய்தி வரும்; நல்ல செய்திக்காக காத்திருப்போம் என பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். அரசியலுக்கு வயது கிடையாது. எல்லா தலைவர்களையும் நான் நேசிப்பவன். பிரதமர் மோடி எனக்கு நெருங்கிய நண்பர்; தமிழ்நாடு வந்துள்ள ஒன்றிய அமைச்சர் அமித்ஷாவுக்கு வாழ்த்துக்கள். பா.ம.க. கூட்டணி குறித்து இரண்டு, மூன்று மாதங்களில் முடிவு தெரிவிக்கப்படும். தேசிய கட்சியோடு இருக்கலாம் அல்லது மாநில கட்சியோடு பாமக கூட்டணி இருக்கலாம்” என்று டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார்.
ஆர்.எஸ்.எஸ் பிரமுகர் ஆடிட்டர் குருமூர்த்தி டாக்டர்.ராமதாஸை சந்தித்துப் பேசியுள்ள நிலையில், தேசியக் கட்சி அல்லது மாநிலக்கட்சியுடன் கூட்டணி இருக்கலாம் என்று ராமதாஸ் கூறியிருப்பது அமித்ஷா பயணத்திற்கு பின்னடைவு என்று அரசியல் வட்டாரத்தில் பேச்ச்சு எழுந்துள்ளது.