கட்சித் தலைவரையே தெரியல்லியா? இதுவும் எதிர்க்கட்சி வேலையா சார்?
Mar 8, 2025, 04:16 IST

இராணிப்பேட்டையில் பாஜகவினர் ஒட்டிய போஸ்டரில் ஒன்றிய அமைச்சர் அமித் ஷாவின் படத்திற்குப் பதிலாக இயக்குனரும் நடிகருமான சந்தான பாரதியின் படம் இடம் பெற்றுள்ளது சமூகத்தளங்களில் எள்ளி நகையாடப்படுகிறது.
ராணிப்பேட்டை மாவட்டத்திற்கு வருகை தரும் இந்தியாவின் இரும்பு மனிதரே, வாழும் வரலாறே வருக வருக என்று அச்சிடப்பட்டுள்ள அந்த போஸ்டரில் சந்தான பாரதியின் படமும் தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலையின் படமும் இடம் பெற்றுள்ளது. மாநில செயற்குழு உறுப்பினர் அருள்மொழி, ராணிப்பேட்டை என்ற போஸ்டர் அடித்தவரின் பெயரும் இடம் பெற்றுள்ளது.
ஆனால், இந்த போஸ்டரை பாஜகவினர் ஒட்டவில்லை. இது திமுகவினரின் வேலை. போஸ்டர் அச்சிடப்பட்ட விவரங்களைப் பார்த்தால் உண்மை தெரியவரும் என்று அண்ணாமலை மறுப்பு தெரிவித்துள்ளார்.