கருவாட்டு சாம்பார் அரசியல் காமெடி செய்யாதீங்க விஜய்.. ப்ளூசட்டை மாறன் விளாசல்!!

நேற்று நடந்து முடிந்த தமிழக வெற்றிக் கழகத்தின் முதலாவது பொதுக்குழுக் கூட்டத்தில் முதன் முதலாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் பிரதமர் மோடியின் பெயரைக் குறிப்பிட்டுப் பேசினார். ஆனால் இருவர் பற்றிப் பேசும் போது விஜய் யின் உடல்மொழி மற்றும் குரலில் பெரும் வித்தியாசம் இருந்தது. இதைக் குறிப்பிட்டு சமூகத்தளங்களில் பலரும் விமர்சனம் செய்து வருகின்றனர்.
திரை விமர்சகர் ப்ளுசட்டை மாறன் நடிகர் விஜய் யின் பேச்சை கடுமையாக விமர்சித்துள்ளார்.
”முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் என்று வீராப்பாக சொன்னால் மட்டும் போதாது. செயலிலும் காட்ட வேண்டும் என புலி போல கர்ஜித்தார் விஜய். அவருடைய பெயரை அவர் கூறுகிறார். இதில் என்ன வீராப்பு இருக்கிறது? இதை நக்கலடித்த அதே வாய்.. மோடியையும் நக்கலடித்து இருந்தால்.. தைரியத்தை பாராட்டி இருக்கலாம்.
ஆனால் இரு கைகளையும் தலைக்கு மேல் வைத்து வணங்கி.. மோடி சார்.. தமிழ்நாட்டுக்கு ஏதாவது பாத்து செய்யுங்க சார் என மண்டி போட்டுள்ளார் விஜய். நமது மாநில உரிமையை வீராப்பாக கேட்க வேண்டும் விஜய். பாத்து செய்யுங்க என பூனை போல கெஞ்சுவது ஏன்? விஸ்வகுரு மோடி, இரும்பு மனிதர் அமித் ஷா என வீராப்பாக சொன்னால் மட்டும் போதாது.
தமிழ்நாட்டின் உரிமையை பறிக்க கூடாது என சவுண்ட் விட்டிருந்தால்.. நீங்கள் மானத்தமிழன். அப்படி செய்யாததால்தான் சொல்கிறோம் உங்களை. B டீம் என்று. பாஜகவிற்கு எதிராக நீங்கள் ஆயிரம் மேடைகளில் கூவி..நாடகம் ஆடினாலும்.. நீங்கள் B டீம்தான்.
திமுக, விசிக வாக்குகளை பிரிக்க பெரியார், அம்பேத்கர்முகமூடிகளை அணிந்து வந்தாலும்.. பருப்பு வேகாது. வரும் தேர்தலில்..வாக்குகளை பிரிக்கும் அசைன்மென்ட் டை முடித்துவிட்டு.. பழையபடி சினிமாவில் நடிக்க கிளம்புங்கள். அதுதானே உங்கள் திட்டம்? பிறகு எதற்கு இங்கே வெஜ் மட்டன் பிரியாணி மற்றும் கருவாட்டு சாம்பார் அரசியல் செய்து காமடி செய்கிறீர்கள்?” என்று ப்ளுசட்டை மாறன் விஜய் யை விளாசியுள்ளார்.
கருவாட்டு சாம்பார்:
— Blue Sattai Maran (@tamiltalkies) March 28, 2025
முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் என்று வீராப்பாக சொன்னால் மட்டும் போதாது. செயலிலும் காட்ட வேண்டும் என புலி போல கர்ஜித்தார் விஜய்.
அவருடைய பெயரை அவர் கூறுகிறார். இதில் என்ன வீராப்பு இருக்கிறது? இதை நக்கலடித்த அதே வாய்.. மோடியையும் நக்கலடித்து இருந்தால்..…