விஜய் பீஸ் கட்டுகிறாரா? மாணவர்களுக்கு ஏடிஎஸ்பி கேள்வி!!

 
ADSP Kathiravan

சிவகங்கையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய ஏடிஎஸ்பி கதிரவன் மாணவர்களைப் பார்த்து கேள்வி எழுப்பியுள்ளார். மாணவர்கள் இளைஞர்களுடன் உரையாடல் போல அவர் பேசும் போது பிடிச்ச ஹீரோ யார் என்று கேட்கிறார். கூட்டத்திலிருந்து விஜய் என்று பதில் வருகிறது. ஹீரோயின் யார் என்று கேட்கவும் நயன்தாரா என்று குரல்கள் ஒலிக்கிறது.

உங்களுக்கு உணவு ஊட்டுவது யார் என்கிறார் , அம்மா என்று பதிலளிக்கிறார்கள். அப்ப ஹீரோயின் யாரு என்று கேட்கவும் அம்மா என்று பதில் வருகிறது. இப்பத்தான் நயன்தாரா என்று சொன்னீர்கள்? அவரா ஊட்டுகிறார். பின்னர்,அம்மா தான் ஹீரோயின் என்கிறார்கள் கூட்டத்திலிருந்து.

அப்ப, ஹீரோ யாரு என்கிறார் ஏடிஎஸ்பி. அப்பா தான் ஹீரோ என்கிறார்கள். கொஞ்சம் முன்னாடி தான் விஜய் ஹீரோ என்றீர்களே! அவரா பீஸ் கட்டுகிறார். அப்பா தான் ஹீரோ என்று கூறிவிட்டு மாணவர்களுக்கு புரியும் வகையில் அறிவுரைகளை எடுத்து வைத்தார் ஏடிஎஸ்பி கதிரவன்.

இவரின் பேச்சு வீடியோ சமூகத்தளத்தில் வைரலாகிக் கொண்டிருக்கிறது.

From around the web