தமிழில் எழுத படிக்கத் தெரியுமா? ரூ.58,000 சம்பளத்தில் காத்திருக்கும் அரசு வேலைவாய்ப்பு
சென்னை குற்ற வழக்கு தொடர்வுத்துறை இயக்குநர் அலுவலகத்தில் காலியாக உள்ள அலுவலக உதவியாளர் (Office Assistant) பணியிடத்தை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள நபர்கள் விரைந்து விண்ணப்பித்து பயன் பெறுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
பணியின் பெயர்: அலுவலக உதவியாளர் (Office Assistant)
கல்வித்தகுதி:
8ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருத்தல் வேண்டும் மற்றும் தமிழில் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்.
வயது வரம்பு:
01.07.2023 அன்று விண்ணப்பதாரர் வயது வரம்பு 18 -32 வயதுக்குள் இருக்க வேண்டும். நிர்ணயிக்கப்பட்ட வயது வரம்பிற்கு மேல் பட்டியல் கண்ட சாதிகள்/ பட்டியல் கண்ட பழங்குடி வகுப்பினர் 5 ஆண்டு வரை வயது வரம்பு சலுகை பெற தகுதியுடைவர்கள் ஆவர். பிசி/ஓபிசி வகுப்பினர் 2 ஆண்டு வரை சலுகை பெற தகுதியுடைவர்கள் ஆவர்.
விண்ணப்பங்கள் அனுப்பப்பட வேண்டிய முகவரி:
இயக்குநர்,
குற்ற வழக்கு தொடர்வுத்துறை,
நெ.5, காமராஜர் சாலை,
சென்னை 600 005.
விண்ணப்பங்கள் வந்து சேர வேண்டிய கடைசி நாள்:
05.01.2024 மாலை 5.45 மணிக்கு பின்னர் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது. பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் பதிவுத்தபால் மூலம் மட்டுமே அனுப்பப்பட வேண்டும். நேரிலோ அல்லது அலுவலகத்திலோ சமர்ப்பிக்கப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது.
விண்ணப்பதாரர் இந்தியராக இருத்தல் வேண்டும். சென்னை மாவட்டத்தில் வசிப்பவராக இருத்தல் வேண்டும். நேர்காணலின்போது 8ம் வகுப்பு தேர்ச்சி பெற்றதற்கான சான்றிதழ் மற்றும் இதர அசல் சான்றிதழ்களுடன் வரப்பெற வேண்டும்.