ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் திமுக போட்டி!! செல்வப்பெருந்தகை அறிவிப்பு!!
காங்கிரஸ் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவனின் மறைவையொட்டி காலியாகியுள்ள ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதிக்கு பிப்ரவரி 8ம் தேதி இடைத் தேர்தல் நடைபெற உள்ளது. இந்தத் தேர்தலில் திமுக போட்டியிடும் என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை அறிக்கை வெளியிட்டுள்ளார்.
”பொதுத்தேர்தலுக்கு 10 மாதங்களே இருக்கும் நிலையில், இந்தியா கூட்டணியின் தமிழ்நாட்டின் தலைவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முதன் முறையாகக் கேட்டுக்கொண்டதற்கு இணங்க, அகில இந்திய காங்கிரஸ் தலைமை மற்றும் தமிழ்நாடு காங்கிரஸ் தலைமையின் தீவிர ஆலோசனைக்குப் பிறகு ஒருமனதாக ஏற்றுக்கொண்டு இந்தியா கூட்டணியின் சார்பாக ஈரோடு கிழக்கு தொகுதி இடைத் தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் வேட்பாளர் போட்டியிடுவார் என்று உறுதி செய்யப்பட்டது.” என்று அறிக்கையில் கூறியுள்ளார் செல்வப்பெருந்தகை.
திமுக வேட்பாளர் இன்று அறிவிக்கப்படுவார் என்று தெரிகிறது. எதிரணியில் அதிமுக போட்டியிடுமா அல்லது தமாகாவுக்கு விட்டுக் கொடுக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது. மேலும் பாஜக இந்தத் தேர்தலில் என்ன முடிவு எடுக்கும் என்பதும் எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது.
ஈரோடு கிழக்கு தொகுதிக்கு வருகின்ற பிப்ரவரி 5ஆம் தேதி இடை தேர்தல் வரவிருப்பதை நாம் அனைவரும் அறிவோம், இந்த தொகுதியில் காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் திரு.ஈ.வெ.கி.ச.இளங்கோவன் அவர்கள் மறைவு அடைந்ததையோட்டி இடை தேர்தல் வரவிருக்கிறது.
— Selvaperunthagai K (@SPK_TNCC) January 10, 2025
2026 சட்டமன்ற பொது தேர்தலுக்கு இன்னும் 10 மாதங்களே… pic.twitter.com/4JnjWznTIs