ஆளுநரைக் கண்டித்து மாநிலம் முழுவதும் திமுக ஆர்ப்பாட்டம்!!
தமிழ்நாடு சட்டமன்றக் கூட்டத்தொடரில் ஆளுநர் உரையை வாசிக்காமல் புறக்கணித்துச் சென்ற ஆளுநர் ஆர்.என்.ரவி யைக் கண்டித்து தமிழ்நாடு முழுவதும், மாவட்டத் தலைநகரங்களில் திமுகவினர் கண்டன ஆர்ப்பாட்டம் செய்ய உள்ளனர். அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி இது குறித்து திமுக மாவட்டச் செயலாளர்களுக்கு தகவல் அனுப்பியுள்ளார்.
இன்று செவ்வாய்கிழமை காலை 10 மணி அளவில் மாவட்டத் தலைநகரங்களில் திமுக சார்பில் ஆளுநர் ஆர்.என்.ரவி யை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும். அமைச்சர்கள் தவிர கட்சியின் அனைத்து அணியினரும் பங்கேற்க வேண்டும் என்று ஆர்.எஸ்.பாரதி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இந்திய அளவில் ஆளுநர் ஆர்.என்.ரவியை கண்டித்து எக்ஸ் தளத்தில் ஹேஷ்டேக் ட்ரெண்ட் செய்யவும் திமுக தொழில்நுட்ப அணியினரும் தயாராகி வருகிறார்கள், #GetOutRavi #RunningRavi என்ற ஹேஷ்டேக்குகள் ட்ரெண்ட் ஆகத் தொடங்கியுள்ளன.