ஒன்றிய பாஜக அரசுக்கு எதிரான திமுக பொதுக்குழு தீர்மானங்கள்!!

 
DMK DMK

மதுரையில் நடைபெற்ற திமுக பொதுக்குழு கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக ஆட்சியைப் பாராட்டியும், ஒன்றிய அரசைக் கண்டித்தும் தீர்மானங்கள் இயற்றப்பட்டன. மொத்தம் நிறைவேற்றப்பட்ட 27 தீர்மானங்களில் 13 தீர்மானங்கள் ஒன்றிய பாஜக அரசைக் கண்டித்து நிறைவேற்றப்பட்டவையாகும்.

ஒன்றிய பாஜக அரசை எதிர்த்து நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் விவரம் வருமாறு,

1.ஏழை - எளிய மக்களை வதைக்கும் நகைக்கடன் கட்டுப்பாடுகளை ரிசர்வ் வங்கி உடனே நீக்க வேண்டும்!

2.தமிழர்களின் மொழி உணர்வுடன் விளையாடாமல் இந்தித் திணிப்பைக் கைவிடுக!

3.கீழடி ஆய்வை மறுக்கும் தமிழ் விரோத பா.ஜ.க அரசுக்குக் கண்டனம்!

4.இரயில்வே திட்டங்களில் தமிழ்நாட்டைப் புறக்கணிக்கும் பா.ஜ.க அரசுக்கு கண்டனம்

5.சிறுபான்மையினர் உரிமைகளைப் பறிக்கும் நோக்கில் இசுலாமியர் சொத்துக்களைச் சூறையாடும் வக்பு திருத்தச் சட்டத்தைத் திரும்பப் பெறுக!

6.ஒன்றிய விசாரணை அமைப்புகளைத் தவறாகப் பயன்படுத்தும் பா.ஜ.க. அரசுக்குக் கண்டனம்!

7.மத ரீதியாகப் பிளந்து, இந்துத்துவாக் கொள்கையை நடைமுறைப்படுத்தி சர்வாதிகாரப் போக்கை நடத்தி வரும் பா.ஜ.க. அரசுக்கு  கடும் கண்டனம்.

8.மீனவர்கள் நலன் காக்க கச்சத்தீவை மீட்டிடுக!

9.சாதிவாரிக் கணக்கெடுப்பை விரைவாகவும் முறையாகவும் நடத்திடுக!

10.தமிழ்நாட்டின் நாடாளுமன்றப் பிரதிநிதித்துவத்தைக் குறைக்கும் மக்கள் தொகை அடிப்படையிலான தொகுதி மறுவரையறை கூடாது!

11.அரசியலமைப்புச் சட்டத்தை மதிக்காமல் உச்சநீதிமன்றத்தோடு மோதும் பா.ஜ.க அரசுக்குக் கண்டனம்!

12.மாநில உரிமைகளைப் பாதுகாக்கும் தீர்ப்பிற்கு எதிரான கருத்துகளைத் தெரிவித்த குடியரசுத் துணைத் தலைவரும், மாநிலங்களவைத் தலைவருமான ஜெகதீப் தன்கருக்கு கண்டனம்

13.உச்சநீதிமன்றத் தீர்ப்பை முன்வைத்துக் கல்வியை மீண்டும் மாநிலப் பட்டியலில் இணைத்திடுக!

From around the web